உண்மைக் காதல்

ஒருமுறை பிறந்தேன்
உலகை காண்பதற்கு அல்ல
உன் அழகை காண்பதற்கு....

ஒருமுறை வளர்ந்தேன்
இளமை காலத்திற்கு அல்ல
உன் வருகை காலத்திற்கு....

ஒருமுறை தவித்தேன்
இசையை கேட்பதற்காக அல்ல
உன் குரலை கேட்பதற்காக....

பலமுறை துடித்தது
என் இதயம்
உயிர் வாழ்வதற்காக அல்ல
உன்னோடு வாழ்வதற்கு...


கவிஞர் : கவிஞர் வாலி(3-Dec-11, 11:34 am)
பார்வை : 753


மேலே