ஜய வந்தே மாதரம்

வந்தே - மாதரம் - ஜய
வந்தே மாதரம்.

ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய

ஆரிய பூமியில் நாரிய ரும் நர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம்

நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நந்தே சத்தர்உ வந்தே சொல்வது

ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
சென்றா யினும்வலி குன்றா தோதுவம்


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 6:23 pm)
பார்வை : 21


மேலே