கணக்குப் பார்த்த காதல்

உனக்கும் எனக்கும்
ஒரே ஊர் -
வாசுதேவ நல்லூர் ...
நீயும் நானும்
ஒரே மதம்...
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட,..
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக் காரர்கள்...
மைத்துனன் மார்கள்.
எனவே
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.


கவிஞர் : மீரா (கவிஞர்)(2-Nov-11, 5:41 pm)
பார்வை : 246


பிரபல கவிஞர்கள்

மேலே