மெசியாவின் காயங்கள் - அமாவாசை

பிறை செழிக்காத இரவுகளில்
பிசைந்தூட்ட ஊட்ட
முற்றத்திலிருந்து
நிலா தின்ற பிள்ளையின்
தூரப் பார்வையில் நின்று சிரித்தது
பழகிய விழியொன்று.
தாய்போல் பார்த்திருந்தது
ஒரு நாள்
பிரிவைக் கோடு கிழித்து
நாய்போல் பாய்ந்தது.
திடுக்கிட்டுத் திரும்ப
இன்மைகள் யாவும் நிறைந்து வழிய
ஆறுதலாய் அருகே இருந்தது
அவள் முகம்.


கவிஞர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா(8-May-11, 9:21 am)
பார்வை : 329


மேலே