நீ
உதிர்ந்து விழுந்த
நிலவின் பிம்பத்தைத்
தன்மேலிட்டுத் தாலாட்டும்
குளப்பரப்பென ஒளிர்கிறது
உன் முகம்
குளிரில் நடுங்கும் விரல்கள்
அனிச்சையாய் தேடும் போர்வையென
என்னை முற்றிலுமாய் மூடி
அனல் பரப்புகின்றன
உன் கோடை நினைவுகள்
நொறுங்கும் இரவின்
அறுபடாத கனவில்
அரூபத்தின் இசையாய்
ஒலித்துக் கொண்டிருக்கிறாய ்
மூடிய விழிகளை மீண்டும்
திறக்கவே விரும்புவதில்லை
நீ உள்ளிருக்கும் ஒவ்வொரு முறையும்

