பத்தாம் வகுப்பு மாணவருக்காக ஒரு மதிப்பெண்கள் ( இலக்கணம் )

பத்தாம் வகுப்பு மாணவருக்காக ஒரு மதிப்பெண்கள் ( இலக்கணம் )
1.பெயரெச்சம் :(வந்தான் )என்பதின் பெயரெச்சம் எடுத்துக்காட்டு:வந்த (த் +அ =த )
அ ஓசைக்கொண்டு முடியும் .
2.வினையெச்சம் _(வந்தான் )வினையெச்சம் காண்.
எடுத்துக்காட்டு :வந்து (த் +உ =து )
உ ஓசைக்கொண்டு முடியும்
.3.வினைமுற்று எடுத்துக்காட்டு:வந்தான்
(ஆன் -என்று முடியும் .
4.வினையாலணையும் பெயர் :வந்தவன்
(அவன் )என்று முடியும் ..
5.வியங்கோள் வினைமுற்று :(க ,இய ,இயர் )
க -வாழ்க
இய -வாழிய
இயர் -வாழியர் .
6.உவமைத்தொகை :பவளவாய்
(போன்ற என்ற உவம உருபு மறைந்து வரும் )
7.உருவகம் :எ .கா (வாய்பவளம்) .
8.தொகை உவமை -:எ .கா( பவளவாய்)
9.விரிஉவமை :எ. கா பவளம் போன்ற வாய் .
10.உவம உருபு :
எ .கா மலரன்னசேவடி =எடுத்துக்காட்டு(அன்ன )
முழவு உரழ் தடக்கை =(உரழ் )
11.வினைத்தொகை :முக்காலமும் மறைந்து வருவது எ .கா (பொங்குகடல் ).
12.பண்புத்தொகை -(நிறம் ,அளவு ,சுவை .வடிவம் ) போன்ற பண்புகள் பெற்று வரும் .
மை விகுதி கொண்டு முடியும் .
எ.கா .செந்தமிழ்= செம்மை +தமிழ்
13.வந்தான்: என்பதில் பகுதி -வா (ஏவல் )
கண்டான் :என்பதில் பகுதி -காண்(ஏவல் )
14.அடுக்குத்தொடர் :எ.கா
அ.அச்சம் :தீ தீ
ஆ .மகிழ்ச்சி :வருக வருக
இ .விரைவு :போ போ .
15.இரட்டைக் கிளவி -சட சட
16.உரிச்சொற்கள் -எ .கா மாமரம் ,தடக்கை .
17.மொழி வகைகள் -மூன்று
அ .தனிமொழி எ .கா :மண்
ஆ .தொடர்மொழி எ .கா :நிலம் கடந்தான் .
இ .பொதுமொழி :எ .கா :
(தாமரை ,பலகை ,வைகை ,எட்டு அந்தமான் ,வேங்கை )
18.வினா வகைகள் -ஆறு
அ .அறிவினாவிற்கு:
எ .கா -திருக்குறளை இயற்றியது யார் ?
(ஆசிரியர் மாணவனிடம் கேட்பது )
ஆ .அறியாவினா:
எ .கா :எட்டுத்தொகை நூலில் அகப்பொருள் நூல்கள் யாவை ?
(மாணவன் ஆசிரியரிடம் கேட்பது )
இ .ஐயவினா எ .கா:
அங்கு கிடப்பது பாம்பா ?கயிரா ?
ஈ .கொளல் வினா எ .கா :கடைகாரரிடம் சென்று
பத்தாம் வகுப்பு புத்தகம் உள்ளதா? எனக் கேட்டல் .
உ .கொடைவினா :எ .கா :
மாணவர் உங்களுக்கு சீருடை இல்லையோ ?
ஊ .ஏவல்வினா எ .கா :முருகா சாப்பிட்டாயா? .
19.விடை வகைகள் -எட்டு
சென்னைக்கு வழி யாது ?
அ .சுட்டு -இது
கடைக்கு செல்வாயா ?
ஆ .மறை -செல்லேன்
இ .நேர் -செல்வேன்
ஈ .ஏவல் -நியே செல்
உ .வினா எதிர்வினாவுதல் -செல்லாமல் இருப்பேனோ ?
ஊ .உற்றது உரைத்தல் விடை -உடம்பு நோகும்
எ .உறுவது கூற ல் விடை -கால் வலிக்கும்
ஏ.இனமொழி விடை :எ கா :
கால் பந்து விளையாடுவாயா ?கைபந்து விளையாடுவேன் எனக் கூருவது
20.ஒரு பொருள் பன்மொழி :
எ .கா -ஓங்கி உயர்த்த மரம் ,நடு மையம் .
21.இயல்பு புணர்சி :
எ .கா -தாமரை மலர் .(தாமரை +மலர் )
22.விகார புணர்ச்சி :எ .கா
அ .தோன்றல்: வாழை +பழம் ( வாழைப்பழம் )
ஆ .திரிதல் : பல் + பொடி (பற்பொடி )
இ .மறைதல் :மரம்+வேர் (மரவேர்)
23.புறத்திணைகள் :
அ .வெட்சி -ஆநிரைக்கவர்தல்
ஆ .கரந்தை -ஆநிரைமிட்டல்
இ .வஞ்சி -படையெடுத்து செல்லுதல்
ஈ .காஞ்சி -படையெடுத்தலை தடுத்தல்
உ .நொச்சி -மதிலை முற்றுகை இடுதல்
ஊ .உழிகை -மதிலை முற்றுகை தடுத்தல்
எ .தும்பை -போர்புரிதல்
ஏ.வாகை -வெற்றி பெறுதல்
ஐ .பாடாண்திணை :
ஆண் மகனது (ஒழுக்கம் ,வீரம் ,கொடை )கூறுவது
ஒ.கைக்கிளை -ஒருதலைக் காதல்
ஒ.பெருந்திணை -பொருந்தாக்காதல்
23.பா வகைகள் :நான்கு
அ .வெண்பா -செப்பலோசை
ஆ .ஆசிரியப்பா -அகவலோசை (அகவற்பா )
இ .கலிப்பா -துள்ளலோசை
ஈ .வஞ்சிப்பா -தூங்கஓசை
24.திசைப்பெயர் புணர்ச் சி :
எ .கா :வடகிழக்கு =வடக்கு +கிழக்கு
25.பண்புப்பெயர் புணர்ச் சி :
எ .கா : கருங்கூந்தல் (கருமை +கூந்தல் )
26.மகர ஈற்று புணர்ச்சி :
எ .கா மரவடி (மரம் +அடி )
27.ஒன்றொழிபொதுச்சொல் :
எ.கா :ஐவர் போருக்கு சென்றனர் .
28.அ .குறிஞ்சி -முருகன்
ஆ .முல்லை -திருமால்
இ .மருதம் -இந்திரன்
ஈ .நெய்தல் -வருணன்
உ .பாலை -கொற்றவை
29. அ .குறிஞ்சி -குறவன் ,குறத்தி
ஆ .மு ல்லை -ஆயர் ,ஆய்ச்சி
இ .மருதம் -உழவன் ,உழத்தி
ஈ .நெய்தல் -பரதன் ,பரத்தி
உ .பாலை -எயினர் ,எயினி
30. அ .குறிஞ்சி -யாமம்
ஆ .மு ல்லை -மாலை
இ .மருதம் -வைகறை
ஈ .நெய்தல் -எற்பாடு
உ .பாலை -நண்பகல்
31.பெரும் பொழுது :
அ இளவேனில் -சித்திரை ,வைகாசி
ஆ .முதுவேனில் -ஆனி ,ஆடி
இ .கார்காலம் -ஆவணி ,புரட்டாசி
ஈ .குளிர்காலம் -ஐப்பசி ,கார்த்திகை
உ .முன்பனிக்காலம் -மார்கழி ,தை
ஊ .பின்பனிக்காலம் -மாசி ,பங்குனி
32.அ .குறிஞ்சி -மலை
ஆ .முல்லை -காடு
இ .மருதம் -வயல்
ஈ .நெய்தல் -கடல்
உ .பாலை -குறிஞ்சி,முல்லையும் வறண்ட பகுதி
33.அ .குறிஞ்சி ;புணர்தல் (பேசுதல் )
ஆ .முல்லை :இருத்தல் (காத்திருத்தல் )
இ .மருதம் :ஊடல் (சிறுசண்டை )
ஈ .நெய்தல் :இரங்கல் (உள்ளத் துன்பவெளிப்பாடு)
உ .பாலை :பிரிதல்
34.அகப்பொருள் வகைகள் -ஏழு
35.அன்பின் ஐந்திணைகள் -ஐந்து
36.பொருளிலக்கணத்தின் வகை :
இரண்டு .(அகம் ,புறம் )
37.ஐகாரக்குறுக்கம் :
அ .ஐம்பது :முதல்
(ஒன்றரை மாத்திரை குறுகும்,ஒரு மாத்திரை ஒலிக்கும் )
தலைவன் :இடை
(ஒரு மாத்திரை குறுகும், ஒரு மாத்திரை ஒலிக்கும்)
வாழை :கடை
(ஒரு மாத்திரை குறுகும் ஒரு மாத்திரை ஒலிக்கும்))
ஆ .ஒளகாரக்குறுக்கம் :
எ .கா (ஒளவை ,வெளவால் )
ஒண்டரை மாத்திரை அளவில் இருந்து , அரை மாத்திரைக் குறுகும் )
இ .மகரக்குறுக்கம்;எ .கா
(போலும் -போலுல்ம்)
அரைமாத்திரை அளவில் இருந்து கால்மாத்திரை குறுகும் )
ஈ .ஆயுதக்குறுக்கம் -எ .கா -(கல் +தீது = கஃறி து )
38.செய்வினைவாக்கியம் :
எ .கா ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார் .
ஆசிரியர் இலக்கணத்தை கற்பித்தார் .
(இரண்டாம் வேற்றுமை வரும் ).
எழுவாய் ,செயபடுப்பொருள் ,பயனிலை என அமையும் .
39.செயப்பாட்டுவினை :
எ .கா இலக்கணம் ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது .(ஆல்)(மூன்றாம் வேற்றுமை வரும் ).
40.ஆடூஉ பொருள் =ஆண் .
41.மகடூஉ பொருள் =பெண் .
42.தனிவாக்கியம் :
எ கா (ஒரு எழுவாய் பயனிலைக் கொண்டு முடியும்.
(முருகன் பாடம் படித்தான்) .
பல எழுவாய் ஒரு பயனிலைக் கொண்டு முடியும். (.மா,பலா வாழை என்பன முக்கனிகள் .)
43.தொடர் வாக்கியம் எ .கா
கபிலர் பாரியைக் கண்டார் ,புகழ்ந்து பாடினார்.
(ஒர் எழுவாய் ,பல பயனிலைக் கொண்டு முடியும் ,ஆகையால் வரும்.)
44.கலவை வாக்கியம் :
எ .கா ;நேற்று புயல் வீசியதால் பள்ளி விடுமுறை .(ஒரு தனித்தொடர் ஒரு துணைத்தொடர் வரும்).
45.தன்வினைத்தொடர்:
எ .கா :கண்ணகி திருக்குறள் கற்றாள் .
(எழுவாய் ஒரு செயலை தானே செய்வது .)
46.பிறவினைத்தொடர் எ .கா கண்ணகி திருக்குறள் கற்பித்தார் (எழுவாய் ஒரு செயலை பிறரைக்கொண்டு செய்வித்தல் ).
47.உடன்பாட்டுத்தொடர்:
எ .கா செல்வி கட்டுரை எழுதினாள்.
(செயல் நிகழ்வதை மறுப்பின்றி ஏற்பது )
48.நிகழ்கால இடைநிலைகள் எ .கா
(கிறு ,கின்று ஆநின்று ).
49.எதிர்கால இடைநிலைகள்:
எ .கா (ப் ,வ் ).
50.இறந்த கால இடைநிலைகள்:
எ .கா (த் ,ட் ,ற் ,இன் )
51.வல்லினம் மிகு இடங்கள் :எ .கா
பாட்டு +போட்டி =பாட்டுப் போட்டி (க,ச ,த,ப ).
அ,இ ,அ எனும் ஒரெழுத்துமுன் மிகும் .
52.வல்லினம் மிகா இடங்கள்
எ .கா: ச ட ச ட(இரட்டைக்கிளவியில் மிகாது )
53.குற்றியலிகரம் =குறுமை +இயல் +இகரம்
54.குற்றியலுகரம் =குறுமை +இயல் +உகரம்
55.நெடில் தொடர் குற்றியலுகரம்= எ .கா நாடு .
56.ஆயுதத் தொடர் குற்றியலுகரம்= எ .காஎ ஃகு .
57.உயிர்த் தொடர் குற்றியலுகரம் =எ .கா வரகு .
58.வன் தொடர் குற்றியலுகரம்= எ .கா பாக்கு .
59.மென் தொடர் குற்றியலுகரம்= எ .கா வண்டு.
60.இடைத் தொடர் குற்றியலுகரம்= எ .கா மார்பு .
61.சிறுபொழுதின் வகைகள் =6
அ .வைகறை:இரவு 2 மணி முதல் 6 மணி வரை
ஆ . காலை :காலை 6 மணி முதல் 10 மணி வரை
இ .நண்பகல் :காலை 10 மணி முதல் 2 மணி வரை
ஈ .ஏற்பாடு :2 மணி முதல் 6 மணி வரை
உ . .மாலை :மாலை 6 மணி முதல் 10 மணி வரை
ஊ .யாமம் :இரவு 10 மணி முதல் 2 மணி வரை .
62.முற்றெச்சம் :எ .கா
நந்தினி வந்தனள் ,போயினள்.
63.அக்றிணை பொதுப் பெயருக்கு: எ .கா மாடு.
64.முதற்பொருள் வகைகள் =2 (நிலம் ,பொழுது )
65.பெரும் பொழுது வகைகள் =6
66.பொழுது வகைகள் =2 (நிலம் ,பொழுது)
67.எற்பாடு:எல்+பாடு
68. வழு எத்தனை வகைப்படும் :7
அ.திணை வழு :எ .கா கண்ணகி வந்தது .
ஆ .பால் வழு :எ .கா கோவலன் வந்தாள்.
இ .இட வழு :எ .கா நீ வந்தான் .
ஈ .கால வழு :எ .கா நேற்று வருவான் .
உ .வினா வழு: எ .கா ஒரு விரலைக் காட்டி இது .சிறியதா ?பெரியதா ?என கேட்டல் .
ஊ .விடை வழு:எ .கா
மதுரைக்கு வழி யாது ?என்னும் வினாவிற்கு ,பாக்கு ஐந்து ரூபாய் என சொல்லுதல் .
எ .மரபு வழு :எ கா
குயில் கூவும் என்பதற்கு, குயில் கத்தும் என கூருவது.
69.செய்யுளிசை அளபெடை =எ .கா
( அ )ஓசைக் கொண்டு முடியும் .(தொழாஅர் )
70.இன்னிசை அளபெடை :எ .கா
( உம் )ஓசைக் கொண்டு முடியும் (கெடுப்பதூஉம்)
71.சொல்லிசை அளபெடை :எ .கா
( இ )ஓசைக் கொண்டு முடியும் .(உரனசைஇ).
72.வெளிப்படைக்கு எ .கா :
தலையில் சுமந்து சென்றான் .
73.குறிப்புச்சொல் =எ .கா
(தலைக்கு பத்து பழம் கொடு ).
74.வினா வகைகள்= 6
அ.அறிவினா :தான் அறிந்த ஒன்றை ஆசிரியர் மாணவனிடம் கேட்பது .எ .கா :சிலப்பதிகாரத்தை இயற்றியது யார் ?
ஆ .அறியாவினா :தான் அறியாத ஒன்றை மாணவன் ஆசிரியரிடம் கேட்பது . எ .கா எட்டுத்தொகை நூலில் அகப்பொருள் நூல்கள் எத்தனை ?
இ .ஐய வினா :ஐயம் ஏற்படும் பொருட்டு ஏற்பட்டும் வினா எ .கா :அங்கு தோற்றுவது பாம்பா ?கயிறா?
கொளல் வினா :
ஒன்றை பெரும் பொருட்டு கேட்கும் வினா
எ .கா :மாணவர் கடைக்கு சென்று பத்தாம் வகுப்பு புத்தகம் உள்ளதா ?எனக் கேட்டல் .
கொடைவினா :ஒன்றைக்கொடுக்கும் பொருட்டு கேட்கும் வினா
எ கா :புலவருக்கு செல்வம் இல்லையோ ?
ஏவல்வினா :பிறரை செய்யும் பொருட்டு கட்டளை இடுவது .எ .கா :திருக்குறளைப் படித்து வா .
இளையகவி