விசித்திர உலகம்
உலகில் அனைவரும் என்னைப்போல்
இருக்க வேண்டுமென்று நினைத்தேன்
"பைத்தியக்காரன்" என்றது!
சுயமரியாதையோடு இருந்தேன்
"பிழைக்கதெரியாதவன்" என்றது!
மனிதாபிமானத்தோடு வாழ்ந்தேன்,
"இவன் பெரிய புத்தன்" என்று
ஏளனம் செய்தது !
இவ்வுலகில் வாழத் தகுதியில்லை
என்றெண்ணி,
உயிரை மாய்த்துகொள்ள முயற்சித்தேன்
"குற்றவாளி" என்றது!
மனித குணங்களை விடுத்து
மிருகமானேன்,
ஏனோ "தலைவன்" என்கின்றது.
விசித்திர உலகம்!!!