என் அருமை காதலியே...!

என் ஜீவ காருண்யமே.!
ஜீவனை சிறை பிடித்து
சிருங்காரச் சித்திரவதை புரியும்
சிரஞ்சீவிச் சித்திரமே.!!
.........................................................
ஒர் பார்வை
நேர் பார்வையால் நோக்க
நெஞ்சம் புகுந்த
சித்து மொழியான
சிந்தடியே.! சிந்தாமணியே.!!
......................................................
வண்டுண்ணா மலரே!
வான் பிறந்த
மூன்றாம் நாள் பிறையே.!
வடிவதனச் சிலையே.!!
....................................................
விஞ்ஞானத்திற்கும்
விளங்காத வியப்பினமே.!
விண்மணிகளை
கண்மணிகளாக சூடிய
பொன்மணியே.!
பொன்மாரி மாலையே.!!
.................................................
மகிழம்பூ வாசமே.!
மனமகிழ் நேசமே!!
மகரநீர் அருந்தினாலும்
தீரா தாகமே.!
ஆசை மேகமே!!
அணையா மோகமே.!!!
.................................................
அன்பின் அரிச்சுவடியே.!
அந்திசந்தி பாராமல்
நினைவை பருகும் அந்தரங்கமே.!
அணுவளவும் பிரியாமல்
அண்மை வேண்டும் பெண்மையே.!
என் பாசத்தின் பலகோடி பண்மையே.!
உயிரின் உண்மையே.!!
........................................................
என் அருமை காதலியே.!
கானம் பாடும் வானம்பாடியே.!
காலச் சக்கரத்தில்
அன்பே அச்சானியாய் கொண்டு
வாழ்க்கை பயணம் செல்வோம்
வதுவை புரிவோம் வா வசந்தமே.!!
................................................................

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (15-Feb-13, 9:25 am)
பார்வை : 149

மேலே