நினைவிட்கொள்

கருவறையில் நித்திரை ஆழ்ந்த வண்ணமாய்
பிறப்பின் சிறப்பினை மறந்திடாதே மானிடா; என்றும்
வாழ்க்கைப் பயணத்தை நினைவிட்கொள் சிந்தையிலே
நாழிகைக் கடந்தாலும், நாட்கள் விரைந்தாலும்
வாரங்கள் மறைந்தாலும், மாதங்கள் நகர்ந்தாலும்
நித்திரை நித்தம் தொடர்வதில்லை
உனக்கு கருவறை என்றும் நிரந்தரம் இல்லை
இதனை அறிவாயோ,
கதவைத் திறந்து வெளியில் வருவாயோ
எத்தனையோ அதிசயங்கள் உதித்திடும் உலகினிலே
அதனை நித்தம் நித்தம் இரசித்திட முனைந்திடுவாயோ
பஞ்சப் பூதங்கள் உலகினில் உல்லாசமாய் உறவாடியே
என்னவென்று உறைப்பது இயற்கையின் விந்தையை
வாராய் மனிதா, இயற்கைத் தாய் மடியினில் கொஞ்சித் தழுவிட
ஒரே முறை உலகத்தைக் காண சிறகடித்து பறந்து விடு .....!

எழுதியவர் : புலவர் தேன்மலர் (26-Feb-13, 7:08 am)
சேர்த்தது : Pulavar Thenmalar
பார்வை : 248

மேலே