விரும்பா நிகழ்வு

விரும்பியது கிடைக்கவில்லை என்றால்,
கிடைத்ததை விரும்ப பழகிகொள் என்று சிறுவயது முதலே,
என் தாயால் எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது.
ஏழ்மை சூழ்ந்து இருந்ததால்
இந்த நிகழ்வு என்வாழ்வில் அடிக்கடி நிகழ்ந்தது...

பள்ளி, கல்லூரியிலும் விரும்பியது கிடைக்காதால்...
கிடைத்ததை நேசித்து, அதிலும் வெற்றிபெற முட்டி மோதினேன்
அத்துடன், நிற்கவில்லை அந்த விரும்பா நிகழ்வு..

எனக்கானவன், நிறத்தில் என்னைவிட சற்று அதிகமாக,
உயரத்தில் எனக்கு சமமாக... என,
என் கனவுக்கு மெத்தை இட்டு, தாலாடி துயில் கொண்டேன்..

திருமண சந்தையில் கட்டுபடியான ஏலம் - என்
துயிலை கலைத்து, கனவை கிழித்தது...

அப்பாவுக்காகவோ, அம்மாவுக்காகவோ
மீண்டும் ஒருமுறை என் வாழ்வில் நிகழ்ந்தேறியது
அந்த விரும்பா நிகழ்வு...

தனிமையிலும், வெறுமையிலும் ஆண்டுகளை
தொலைந்த பின், கரைந்து போன கனவை தேடுகிறேன்.
எனக்காக ஓர் நாள் வாழ...

எழுதியவர் : ஜெயதேவி (26-Feb-13, 8:52 am)
சேர்த்தது : Jaya Devi
பார்வை : 177

மேலே