நிலையான வறுமை

எங்கள் வறுமை
காணாமல் போனது -
அரசு அறிவித்தபடி
பண்டிகை காலங்களில் மட்டும்.,

வந்தது
மழை நீர் சேகரிப்பு திட்டம்

வரவேயில்லை
அன்று முதல் மழைநீர்.,

கட்டிகொடுத்தார்கள்
சமத்துவபுரத்தில்
எங்களுக்கும் ஒரு வீடு.,

அரை பசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
அதையும் வாடகைக்கு விடுத்து.,

வறுமை நிலையை சமாளிக்க
மாறினோம் நாங்களும்.,
வேறொரு மதத்தில் "தருகிறோம்"
என்றதால்.,
அதையும் தடுத்தது
"மதமாற்று தடை சட்டம்"

இறுதியில்
வயல்காடு உழைப்பில் அடைந்தோம் தஞ்சம்
அதை தவிடுபொடியாக்கியது
வறட்சி என்னும் வஞ்சம்.,

புத்தக மூட்டையை
சுமக்க வேண்டிய வயதில்
சுமக்கிறோம் நாங்கள்
தள்ளுவண்டியில் சுமைகளை.,

இனியாவது வருமா?

வறுமை ஆட்சியை அழித்து
நிலையான ஆட்சியை நிறுவ .,
நல்லதொரு மாற்றம்.,

எழுதியவர் : திருவருண் (3-May-13, 6:15 pm)
சேர்த்தது : thirusenthilan
பார்வை : 147

மேலே