ஆறடிச்சலையிலோர் இதழ்ப்பயணம்
என் சொர்கத்தின் புறவழிச்சாலை நீ
ஆறடிச்சலையிலோர் இதழ்ப்பயணம் .....
அதிவேகம் தான்
என் விருப்பம் என்றாலும் ...
'மிதவேகம் மிகநன்று '
என்று அறிகிறேன்
உன் மேடு பள்ளங்களில் .
ஆறடிச்சலையிலோர் இதழ்ப்பயணம் .....
ஏனோ தெரியவில்லை
உன் வெகத்தடையில்
என் வேகம் கட்டுக்குள் அடங்கவில்லை
ஆறடிச்சலையிலோர் இதழ்ப்பயணம் .....
எத்தனை
முறைச்சொன்னாலும் - என்
திமிரெடுத்த
விரல்களும்
இதழும்
கேட்பதேயில்லை - உன்
'வளைவுகளில் முந்தாதீர்' என்பதை

