யாரடி நீ எனக்கு

அதட்டாத ஆசிரியை
அண்ணா ..
என்றழைக்காத தங்கை
தலைநரைகாத அன்னை
தட்சணை கேட்காத தெய்வம்
காமம் கேட்காத காதலி
நான் தூக்கி வளர்க்காத மகள்
இவை யாவுமாய்
இருகிறாயே ....

யாரடி நீ எனக்கு ...
கண்டுவிட்டேன் தமிழில்
உன்னை சுட்டிச் சொல்ல
ஒரு வார்த்தையுண்டென்பதை

தோழி.....

எழுதியவர் : அருண்குமார்.பா (31-Aug-13, 2:40 pm)
சேர்த்தது : arunkumar b
பார்வை : 227

மேலே