இயற்கை செய்திடும் கோலமிது

தழைத்து செழித்து இருந்தேன்
நாடி வந்தனர் நிழலைத் தேடி !
பசுமை நிறைந்து இருந்தேன்
பசுவையும் நிறுத்தி வைத்தனர் !

இலைகள் காய்ந்து மெலிந்தேன்
இருட்டிலும் என்னை ஒதுக்கினர் !
வயதாகி விட்டதால் தளர்ந்தேன்
வறட்சியின் சின்னமாய் மாற்றினர் !

பட்டுப் போனதால் பழுதானேன்
விட்டு சென்றன பறவைகளும் !
தனிமரம் ஆனதால் குறுகினேன்
விலகி சென்றனர் உயிரினங்கள் !

மரத்திற்கு மட்டுமா இந்தநிலை
மனிதனும் காண்பான் இந்நிலை !
இயற்கை செய்திடும் கோலமிது
எவருக்கும் வந்திடும் காலமிது !

இயற்கை கோலத்தை மாற்றுபவன் மனிதனே !
அழிக்காதீர் இயற்கை கோலத்தை இனியேனும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (2-Sep-13, 10:04 pm)
பார்வை : 133

மேலே