காதலர் தினம்
எழுதுகிறேன் ஒரு
கவிதை என் இதயம்
நினைத்த காதலிக்காய்
பெப்ரவரி 14ல் உலகக் காதலர் தினம்
உன் நினைவுகள் என்னையத்
தொடர்கையிலே
தொடர்கதையாய் போன என்
தேவதையோ
தேடித் தேடி அழைக்கிறேன்
நீ ஏன் மௌனித்துப் போனாய்
அதனால் நான் மரணித்துப்
போகிறேன்
விதையாய் கிடந்த என்னை
வேர் விட வைத்தவளே!
அருகே நீ இல்லாத நாட்களில்
வர்ணங்கள் சுரண்டப்பட்ட
வானவில்லாய் நான் .................
உன் குரல் கேட்க நாழிகையில்
சப்தங்கள் பறிக்கப்பட்ட வார்தைகளாய் நான்
பறந்து விரிந்திருந்த என் உலகம்
சுருங்கி சுருங்கி நீயாகிப் போனதடி

