புரிந்து கொள்ள ........!
மனச் சுவரில் எழுதி
வைத்த
எண்ணங்களை
மடலில் வடித்து
வைக்கின்றேன்
மனதால் படித்து
விட்டு
மனதுக்குள் பிடிக்க
வில்லை என்று
மண்ணுக்குள் புதைத்து
விடாதே
மந்திரப் புன்னகை
ஒன்று போதும்
மனிதன் நான்
புரிந்து கொள்ள

