என்ன செய்துவிட்டாய் என்னை !

என்ன செய்து விட்டாய் என்னை
உன்னால் ஏதேதோ ஆகிறது பெண்ணே !

எனக்கு பிடித்த புகை - உன்னால் ஆனது பகை !

என்னைப் பிடித்த மது போதை
உன்னால் மறந்து போன ஒரு பாதை !

பிடித்திருகின்றன அனைத்தும் - உனக்கு பிடித்து இருந்தால் மட்டுமே!

அழகாய்த் தெரிகின்றன அனைத்தும் - உனக்கு அருகில் இருந்தால், என்னையும் சேர்த்து!

எழுதியவர் : மணிகண்டன் குரு (15-Sep-13, 7:39 pm)
சேர்த்தது : Manikandan Guru
பார்வை : 128

மேலே