இயற்றிவிடு

இலட்சியமில்லா பலர்
இலட்சங்கள் கேட்டதனால்
என் வாழ்வு
இலவுகாத்த கிளியின் கதையாச்சு
அதனால் என் ஆசைகளும்
முற்றிய வெண்டிக்காய் போலாச்சு !

என்னை பெற்றதனால்
அப்பாவின் கால்கள்
தேய்ந்து போச்சு
உழைத்ததனால் எங்கள்
உயிர்கள் மட்டுமே
மீதமுமாச்சு !

கேள்வியான என்
வாழ்க்கையினால்
தங்கையவள்
வாழ்க்கையும் கேலியாச்சு !

அதனால் அவள்
ஆசைகளும்
கூரையில் தொங்கும்
ஒட்டடை போலாச்சு !

மாடிவீட்டு
மல்லிகாவின் திருமணம்
பத்திரிகையில் விளம்பரமாச்சு
அதைப்பார்த்த
அன்னையவள் கண்கள்
கண்ணீரை உமிழ்ந்தாச்சு !

இத்தனையும் நான்
பெண் என்பதனாலாச்சு
என் போல்
எத்தனை எத்தனைபேர்
தாய் நாட்டில் வாழ்வது விதியாச்சு !

தலைக்கவசம் அணியாவிட்டால்
இலஞ்சம் வேண்டிவிட்டால்
தண்டனை வழங்குவது
அரசின் சட்டமாச்சு !

சீதனம் வேண்டுகின்ற
கலியுக ராவணர்களை தண்டிக்க
அரசு
சட்டமியற்ற மறந்துபோச்சு !

கூழோ கஞ்சியோ
குடிசையில் குடித்து
தாய்நாட்டில் நாங்கள் வாழ்வதற்கு
சீதனச்சட்டம் இயற்றுவது
இன்றைய கட்டாய தேவையாச்சு !

எழுதியவர் : பிரகாசக்கவி எம்.பீ அன்வர் (16-Sep-13, 5:07 pm)
பார்வை : 69

மேலே