நீதரும் சுகங்களெல்லாம்!...

கவர்ந்திடும் கண்ணசைவுகளெல்லாம்
வெறும் சைகைதானடா
கனிவான பார்வைக்கு முன்னால் !

சிரிக்கசிரிக்க பேசுவதெல்லாம்
வெறும் பேச்சுதானடா
உணர்வான வார்த்தைக்கு முன்னால் !

அலைந்துதிரிந்து செய்வதெல்லாம்
வெறும் செயல்தானடா
அக்கரையான செயலுக்கு முன்னால் !

கேட்டுக்கேட்டு வாங்கிக்கொடுத்ததெல்லாம்
வெறும் பச்சம்தானடா
கேட்காதபோது வாங்கிவருவதற்கு முன்னால் !

கட்டுக்கட்டாக பணம்சேர்த்துவைப்பதெல்லாம்
வெறும் மிச்சம்தானடா
கட்டுப்பாடான செலவுகளுக்கு முன்னால் !

பெருமைபடவைக்கும் பாசமெல்லாம்
வெறும் பகட்டுதானடா
பண்பான பதிளுக்கு முன்னால் !

தகித்திணைந்து கலந்ததெல்லாம்
வெறும் பகிர்தல்தானடா
தோழமையான அணைப்புக்கு முன்னால் !

அந்தநேர சுகங்களெல்லாம்
வெறும் துச்சந்தானடா
அன்பான சொல்லுக்கு முன்னால் !

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (19-Sep-13, 8:31 am)
பார்வை : 104

மேலே