அனுமதி இல்லை

பாலை வனத்தில் நான்
வாழ்ந்தபோது என் மீது
விழும் பனித்துளிகள் கூட
என் மேனியில் அமராமல்
ஓரமாய் ஒதுங்கி விட்டது

என்னிடம் உன்னைத் தவிர
வேறு யாருக்கும் இடம் இல்லை
அறிந்து கொண்டதால் பசுந்தரையில்
நான் படுத்துறங்கிய வேலை
தென்றல் காற்று கூட என்னைத்
தொட்டுச் செல்ல அஞ்சுகின்றது

ஏன் தெரியுமா?

உன்னைத் தவிர
வேறு எவருக்குமே
என்னைத் தொட அனுமதி
இல்லை என்பதனால்!

எழுதியவர் : எம்.எஸ்.எம்.சமீர் (28-Sep-13, 1:24 pm)
Tanglish : anumathi illai
பார்வை : 130

மேலே