என் தேவதை உன்னைப்போலவே
சமயங்களில்
நெற்றியில்
பொட்டு வைத்துக்கொள்வதில்லை நீ
நெற்றியில்
வைக்காவிட்டால் பரவாயில்லை
கன்னத்தில் வைத்துக் கொள்
கண்ணு பட்டுவிடப்போகிறது
-
இதை உன்னிடம் சொன்ன
அந்த விநாடியில்
சிவந்த உன் கன்னங்கள்
இரத்தச் சிவப்பானது
-
இந்த நிகழ்வு
ஓவியமாய்
என் உயிரில்
உறைந்து கிடக்கிறது
என் தேவதை
உன்னைப்போலவே
-
-----------------------------
>அ.சுந்தரமூர்த்தி
நன்றி: நிகழும் காதல் வருடம் - (கவிதைகள்)

