இந்த நாசமாபோன கம்ப்யூடர் மட்டும் இல்லாம இருந்திருந்தா
பச்சக்குதுறா தாண்டி பனங்காய் வண்டி ஓட்டி
பத்து தெரு ஓடி பாதி நாள் ஓட்டி
எரும மேல ஏறி எட்டிக்குதித்த இடமும்
கிணத்துக்குள்ள குதிச்சும் கிளுகிளுப்பா இருந்தோம்
காடு மேடு ஏறி கசமுசானு ஆடி
மெதுவா வீடு வந்து சேந்தா
அடிச்சுக்கிட்டே எனக்கு ஊட்டிவிடுவா அம்மா
அப்பா கொடுத்த எட்டணா காசு
ஆட்டைய போட்ட இருபத்தியஞ்சு பைசா
மொத்தமா சேத்தா பதனஞ்சு கலர் முட்டாய்
வகுத்து திண்ணு வக்கனையா பேசி
அப்படியே வருவோம் வீடு வரைக்கும்
அஞ்சுநாள் அனில் கொஞ்சநாள் குருவி
ஆசையா புடிச்சு அக்கறையா பாத்துப்போம்
கொரங்கு பெடல் சைக்கிள் எங்க ஊரு வண்டி TVS50
அப்போ அது தான் எங்களுக்கு பல்சர் மாதிரி
துள்ளி குதித்த மனசும் தட்டான் பிடித்த வயசும் தாண்டி போச்சே மக்கா!
பென்சில் புடிச்ச கையும் இப்போ மொக்கு ஒடஞ்சு போச்சே மக்கா!
தமிழ் எழுதின தாழும் கிழிஞ்சு போச்சே மக்கா!
என் நண்பனோட கடிதாசி தொலஞ்சு போச்சே மக்கா!
முகம் பார்த்து திரிஞ்ச நாளும் மறந்து போச்சே மக்கா!
இப்போ முகப்புத்தகத்துல பரிமாற்றம் நடக்குதே மக்கா!
மறந்து போச்சே மக்கா எல்லாம் மறந்து போச்சே மக்கா
தட்டெழுது பயின்று தடம் மாறி போனேன்
தானே காகிதத்தில் தமிழ் எழுத மறந்தேன்
கண்ணாடி பொட்டிய கண் மூடாம பாத்து
கருவளையம் வந்து தொலஞ்சது தான் மிச்சம்
கண் மூடி படுத்தா கண்டதும் மனசுக்குள்ள
கரப்புடிச்சு ஆட்டுதே நா என்ன சொல்ல மக்கா!
அஞ்சு நாள் வேலை அறகொரையா தூக்கம்
ரெண்டு நாள் லீவ்வு ஒரு நாள் முழுசா பயணம்
இந்த நாசமாபோன கம்ப்யூடர் மட்டும் இல்லாம இருந்திருந்தா
என் குடும்பத்தோட சந்தோசமா இருந்திருப்பனே மக்கா!
மாசம் தொடங்குனா கொண்டாட்டம் மாசக்கடைசில திண்டாட்டம்
கஷ்டம் இல்லாம வாழ கடன், கிரெடிட் கார்டு மட்டுமே உதவிக்கு
இந்த நாசமாபோன கம்ப்யூடர் மட்டும் இல்லாம இருந்திருந்தா
என் மளிகை கடையில முதலாளியா இருந்திருப்பனே மக்கா!
இத்தனையும் எழுத எனக்கு நேரமிருக்குது
ஆனா நேரம் போறது தெரியாமா காலம் ஓடுது
இந்த நாசமாபோன கம்ப்யூடர் மட்டும் இல்லாம இருந்திருந்தா
இப்போ இந்த வரிகள் புத்தகத்துல வந்திருக்குமே மக்கா!