தமிழ் அகராதி

அகடூரி - வயிற்றால் நகர்வது : பாம்பு.
அகட்டுதல் - அகலவைத்தல்.
அகட்டுத்தே - ஆனைமுகன் : கணபதி : இலம்போதரன் : தொப்பையப்பன்.
அகணம் - கணியாதது : இலகு.
அகணி - பனை : தெங்கு மட்டைகளின் நார் : வயல் : மருத நிலம் :
...........66... கடுக்காய் : நஞ்சு : உட்பட்டது : நம்பிக்கைக்குரிய நட்பினர்.


அகணிகம் - கணிக்கப்படாதது.
அகணிப்பாய் - மூங்கிற் பாய்.
அகண் - அண்மை : அருகு.
அகண்டம் - முள்ளில்லாதது
அகண்ட பரிபூரணம் - வேறுபாடற்று எங்கும் நிறைந்திருத்தல்.


அகண்ட பரிபூரணம் - வேறுபாடற்று எங்கும் நிறைந்திருத்தல்.
அகண்டம் - எல்லாம் : பேரகல் விளக்கு : கண்டிக்கப்படாதது : அருகன் :
-----------66- கடவுள் : கூறுபடாதவன் : சிவன் : நிறைந்தவன் : திருமால்.
அகண்டாகண்டன் - பரம்பொருள் : எதற்கும் அஞ்சாதவன்.
அகண்டாகாரம் - அளவுபடாத வடிவம் : பெருவெளி.
அகண்டி - இசைக்கருவி வகை.

நன்றி நிலாமுற்றம்

எழுதியவர் : கே இனியவன் (6-Oct-13, 11:29 am)
பார்வை : 361

சிறந்த கட்டுரைகள்

மேலே