சொல்வதெல்லாம் உண்மை

உண்மையின் குரலாய் ஒலித்து
நயவஞ்சகர் முகம் காட்டி
கண்ணீரின் வலி உணர்த்தும்....!
இதயமில்லா மனிதரின்
முகமூடிதனைக் கிழித்து
மறுமுகம் தனைக் காட்டிநிற்கும்..!
புதைக்கப்பட்ட உண்மைகளாய்
மறைக்கப்பட்ட கொலைகளையும்
துணிச்சலாக அலசி ஆராயும்........!
இருள் கண்ட முகங்களிலும்
வெளிச்சம் தனைப் பாய்ச்சி
நம்பிக்கைத் தேரில் ஏறவைக்கும்..!
முடிவு தெரியா மனங்களுக்கும்
விடிவுப் பாதை காட்டி
விழிப்புணர்வை ஊட்டிவிடும்...!
நாலு சுவருள் தீர்க்கமுடியா
மனதைக் குடையும் துன்பங்களை
சுமுகமாகத் தீர்க்க முனையும்..!
போக்கிடமில்லா மனிதருக்கும்
ஆதரவுக் கரம் நீட்டி
தற்கொலையைத் தவிர்த்துவிடும்..!
கைவிடப்பட்ட உறவுகளின்
வாழ்க்கைத் தரம் உயர
உதவி வேண்டி கை கொடுக்கும்...!
சமூக அவலங்களைப் பறைசாற்றி
படிப்பறிவில்லா பாமரனுக்கும்
சட்ட ஆலோசனை வழங்கிநிற்கும்..!
மருத்துவமின்றி மனங் குமுறும்
வறியவர் தேவையைப் பூர்த்திசெய்ய
இலவச மருத்துவம் பெறவுதவும்....!
புறக்கணிக்கப்பட்ட காதலரை
மணவாழ்வில் இணைத்துவைத்து
ஆசிகள் பலகூறி மங்கலப் பூச்சொரியும்..!
இன்னும் பல சொல்வதற்கு
ஊடகம் செய்யும் பணியதனை...
நிலைத்துநின்று புகழ் பெறட்டும்
`சொல்வதெல்லாம் உண்மை` ..!!
-------------------------------------------------------------------
தோழி துர்க்கா