பேருந்தினுள் பேரின்பம்

மக்கள் நிறைந்த பேருந்து..
மூச்சு படும் தூரத்தில் அவள் முகம்..
கோர்த்து கொண்ட கைவிரல்கள்..
அவள் தலை சாய்த்த என் தோள்கள்..
பார்க்காதது போல் பார்க்கும் மக்கள்..
திடீர் நிறுத்தத்தால் அவளின் அச்சம்..

மெய் மறந்து நின்ற நான்
நிஜ உலகத்துக்கு மீண்டு வந்தேன்..
அவள் அங்கு இல்லை..
அத்தனையும் கனவு..
காரணம் அவள் நினைவு...

பேருந்து நெரிசலிலும்
பேரின்பம் இந்த காதல்...

எழுதியவர் : மாடசாமி மனோஜ் (28-Oct-13, 2:53 pm)
பார்வை : 529

மேலே