madasamy11 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  madasamy11
இடம்:  Bangalore
பிறந்த தேதி :  11-Mar-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Mar-2013
பார்த்தவர்கள்:  736
புள்ளி:  40

என்னைப் பற்றி...

நான் ஒரு மென்பொருள் நிறுவனத்து machine ...

உண்மை தான்.. இயந்திரம் போல சுழன்று கொண்டிருக்கும் சாதாரண மனிதன்...


மக்கள் தொகை நிறைந்த என் போன்ற நிறய இயந்திரங்கள் வாழும் பெங்களூர் இல் வசிக்கும் நான் அடிப்படையில் ஒரு சிறு கவிஞன்.

10வது படிக்கும் போது என் கிறுக்கல் கவிதைகளை கண்ட என் நண்பர்களும் என் ஆசிரியர்களும் என்னை ஒரு அங்கிகரிக்க பட்ட கவிஞனாக மாற்றினர்.

காலம் போன போக்கில் சென்று அவ்வபோது கவிதை எழுதி கவிதை போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்று வந்தாலும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு இருந்ததால் முழு நேர கவிஞனாக என்னால் மாற முடியவில்லை..


படிப்பு முடித்து நல்ல நிறுவனத்தில் பனி புரியும் நான் அவ்வபோது எழுதி வருகிறேன்.

இருப்பினும் இந்த இயந்திரத்திற்கு கவிதை படைக்க நேரம் கிடைபதில்லை.. கிடைக்கும் போது எழுதுவேன்...

எனக்காகவும் என் மக்களுக்காகவும் என்றும் ஒரு நல்ல எழுத்தாளனாய் என் பணி தொடரும்.....

என் படைப்புகள்
madasamy11 செய்திகள்
madasamy11 - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2017 5:59 am

பன்னிரண்டு வருடம்
படித்த என்னை,
படிக்காத பக்கங்கள்
சோதித்து பார்க்கும்
எனத் தெரியாது!

எனதறிவை நீட்
ஏளனம் செய்யும்
எனத் தெரியாது!

விலக்கு வாங்கித்
தருவோமென்பதெல்லாம்
ஏமாற்று அரசியல்
எனத் தெரியாது!

பள்ளிப்படிப்பே
பெருங்கனவான
எனக்கு,
பயிற்சி வகுப்பு
பயில வேண்டும்
எனத் தெரியாது!

கனவுகளை
கலைத்து விட்டு
கிடைத்ததை படித்து
காசுக்காக
ஓடத் தெரியாது!

பிணி காக்கும்
பணி செய்ய
பணம் போதுமெனத்
தெரியாமலா
பன்னிரண்டு வருடம்
பகலிரவாய் படித்தேன்?

நீட் நீட் என போராடி
நீட்டி படுத்திருக்கிறேன்
பிணமாய்!

தற்கொலை செய்த
கோழை அல்ல நான்!

அரசும் அரசியலும்
ஆட்டிப்படைத்ததால

மேலும்

ஒன்றரை கோடி admk அறிவுஜீவி தொண்டர்களுக்கு அன்பு வணக்கங்கள் ; தாங்கள் என்ன காரணத்திற்காய் இந்த கட்சியில் இணைந்தீர்கள் என்பது தெரியாது . ஆனால் தாங்கள் சுயத்தை விரும்பாமல் பொதுஜன மக்களின் மகிழ்ச்சியை நிலை நாட்டுவது முக்கியம் . இப்போது என்ன ஆட்சி நடக்கிறது , அது எப்படி நடக்கிறது ,மக்களின் நிலை என்ன என்பது எங்களை விட தங்களுக்கு நன்றாகவே புரியும் . யார் அதிகம் லாபம் சம்பாதிக்க முடியும் என்ற கோஷ்டி மோதலில் கட்சி படும் பாடும் புரியும் . அதுமட்டுமல்ல தமிழகத்தின் இருண்ட காலம் என்று இந்த ஆட்சியை தாராளமாய் வர்ணிக்கலாம் . இப்படிப்பட்ட ஆட்சி இனியும் தொடரத்தான் வேண்டுமா ? தாங்கள் மட்டும் சிந்தித்தால் கூட போதும் , எம்குல பெண்கள் இனியும் நீட் எனும் எமனுக்கு பயந்து தூக்குகயிறு தேடும் அவஸ்தை ஒழிய இந்த ஆட்சி முடியத்தான் வேண்டும் . வல்லரசு நாடுகள் கூட தம் மக்களின் எண்ணம் அறிந்து சட்டம் இயற்றும் , ஆனால் இங்கு அறிவிலி அரசியல்வாதிகளின் மாட மாளிகைகள் உயர தேவையற்ற சட்டங்கள்(original licence ) இயற்றி மக்களின் துயர மூட்டையின் கனத்தை இன்னும் உயர்த்தி வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது , இனியும் தேவைதானா இந்த இருண்ட ஆட்சி ? தண்ணீர் பஞ்சம் தீர்க்க வழிகள் செய்யவில்லை , எம் விவசாய மக்களின் துயர் தீர்க்க துளியளவும் முயல வில்லை , இளம் தலைமுறைகளின் தலையெழுத்தை நீட் எனும் எமனை கொண்டு கொன்று ருசித்தும் ஆட்சியாளர்களின் பித்தம் தெளியவில்லை . இனியும் இவர்கள் ஆட்சி தொடரத்தான் வேண்டுமா ? admk கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்கள் ஒன்று கூடினால் கூட போதுமே , இந்த ஆட்சி கலைவதற்கு? மௌனம் சாதித்தது போதும் தமிழா? நாளைய இளம் தலைமுறைகளை காத்திட ஒன்று கூடி போராடுவோம் ! ஜல்லிக்கட்டு போராட்டம் போல் தமிழகத்தை காத்திட ஒன்று கூடுவோம் , புது தமிழகம் படைப்போம் ! 02-Sep-2017 6:41 pm
ஓர் உயிரை திட்டம் தீட்டி கொன்று விட்டார்கள் 02-Sep-2017 7:50 am
madasamy11 - MadhuNila அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2017 7:11 pm

விலையைக் கேட்ட அம்மா விலகிச் சென்றாள் குழந்தையோடு
அழுதது பொம்மை !!!

மேலும்

நன்றி :-) 09-Jul-2017 8:33 am
சமீபத்தில் படித்த சிறப்பான கவிதை.. :) 30-Jun-2017 1:07 am
madasamy11 - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2017 5:24 pm

ஒரு
மழை இரவில்
என் கண்ணீர் துளிகள்
பச்சோந்தி ஆனதே..

அவள்
நினைவு வந்து
நிஜ உலகம் கரைந்து
பிம்பங்கள்
கண் சேருதே..

ஒற்றை குடையில்
ஒருவன் கைபிடித்த
ஒருத்தி முகம்
உன் முகமாய்
தோன்றுதடி..

மின்னல் அடித்து
இடித்த இடி
கண் விரித்து
ஏன் தாமதமென
நீ கேட்டது போலே
தோன்றுதடி..

சாரல்
மழைத்துளிகள்
எல்லாம், எச்சில்
தூறல் தூரி
நீ பேசுவதாய்
தோன்றுதடி...

காதல் பிரிவின்
காரணமாய் நாம்
வடித்த கண்ணீரெல்லாம்
மழையாகிப் பெய்யுதோ
பெருக்கெடுத்து ஓடுதே...

என் வாழ்வு
கரை சேரும் வரை
என் கண்ணீர் மழை
கடல் சேர்ந்து
கொண்டே இருக்குமோ..?

மேலும்

madasamy11 - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2016 12:46 pm

ராகங்கள் பதினாறு
அவர் இசையில் அது நூறு..
ஏழு ஸ்வரங்கள் இசையில்
மூன்று போதும் அவருக்கு..

இசையால்
மழை பெய்யுமோ?
இவர் நினைத்தால்
கண்ணீர் பெய்யும்..

தூக்கம் இல்லாத இரவில்
தாலாட்டும் அன்னை
இவர் இசை..

மண்டை வெடித்த
மன அழுத்தத்தில்
மருந்தாய் வரும்
இவர் இசை..

காதலியின் பிரிவில்
கலங்கி நிற்கையிலே
கண் முன் நிற்பாள்
இவர் இசையால்..

அவர் விரல்பட்ட ஸ்வரங்களில்
எத்தனை இனிமை !
தேன் கொண்டு எழுதினாரோ
ஸ்வரங்களை?
எவரிடம் பெற்றாரோ
இசை வரங்களை ?

தோல்வியில் ஆறுதலாய்
வெற்றியில் ஆனந்தமாய்
சோகத்தில் சுகமாய்
ஏக்கத்தில் துணையாய்
அவர் இசை போதும்
எனக்கு..
வேறென்ன

மேலும்

அவரது இசை என்றும் மனதை உருக்கும் துள்ளலிசை. அருமை நண்பரே. 03-May-2016 9:20 pm
உண்மைதான்...அவரின் இசையில் அத்தனை இனிமையும் மன நிறையும் இருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 6:51 pm
அருமை அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை ... இசைஞானியின் பெருமை .... 30-Apr-2016 1:14 pm
மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள் தோழா. அருமை அருமை.. 30-Apr-2016 12:58 pm
madasamy11 - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2016 9:41 pm

மோகம் கொண்டேன்
மூச்சினிலே..
வேகம் எடுத்தேன்
நெடுஞ்சாலையிலே..

வேகம் வேகம்
வேண்டுமோ இன்னும்?
வேண்டாம் வேகம்
காலன் தெரிகிறான்..

உயிர் விட்டால்
சொர்க்கமோ நரகமோ..?
என்னுயிர் நீ தொட்டால்
நிகழ் வாழ்வே
சொர்க்கமே..

வேகமென்ன வேகம்
நம் மோகமிங்கு போதும்
குறுஞ்சாலை ஆகும்
நெடுஞ்சாலை..

மித வேகம் நெடு மோகம்..

மேலும்

பாதையின் பயணத்தில் காதலின் விளக்குகள் சமிஞ்சைகள் 28-Mar-2016 10:51 pm
madasamy11 - madasamy11 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2015 1:17 am

என் விரல் இடுக்கில்
மழைத்துளி படாமல்
உன் விரல் மேல் பட
கை கோர்த்து நாம் நடக்க
நீ வருவாயா..?

முகத்தில் முத்தங்களாய்
மழை பொழிவதில்
பொறாமை கொண்டு
துப்பட்டாவில் முகம் மூட
நீ வருவாயா..?

கடும் மேகமூட்டத்தில்
முகம் மறைத்த
நிலவுக்கு மாற்றாய்
உன் முகம் நான் காண
நீ வருவாயா..?

சடசட மழைச்சத்தத்திலும்
நடுங்கும் உன் பற்களின்
சத்தம் என் பாடலுக்கு
பிண்ணனி இசையாக
நீ வருவாயா..?

மழையிலும் மறையாத
சில நட்சத்திரங்களை
வெட்கத்தில் ஓடவைக்க
காதல் செய்ய
நீ வருவாயா..?

குண்டு குழியில்
தேங்கிய நீரில்
புகைப்படமாய் நாம்
நிற்க, அதை ரசிக்க
நீ வருவாயா....?

மழை நின்ற போதும்
ரசனை தீர

மேலும்

இரண்டு நாட்களாக தங்களின் கவிதைகளை வாசித்து வருகிறேன் அனைத்தும் அருமையாக உள்ளது. அனைவரின் வாழ்விலும் நடக்கும் அருமையான தருணங்களை எடுத்து படைத்துள்ளீர். தங்களின் மேலும் பல படைப்புகளை வாசித்து மகிழ ஆவலுடன் உள்ளேன் ரசிகனாக:) 14-Apr-2016 9:15 pm
மிகவும் அருமை நண்பரே கவிதையில் உள்ள ஏக்கங்களை கண்டு விரைவில் வருவாள் அவள்:):) 14-Apr-2016 9:02 pm
madasamy11 - madasamy11 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-May-2014 4:49 pm

கோவிந்தா கோவிந்தா
மயங்கிப்புட்டேன் நானுந்தான்
காந்தம் போல கண்ணவச்சு
இழுத்துபுட்ட நீயுந்தான்...

சித்திரை திருவிழாவில்
சித்திரமா நீ நடந்தா...
பத்திரமா வச்ச மனசு,
பறந்துபோச்சு காத்தோட....
பட்டுல பாவாட
காதோட ஜிமிக்கியாட
உன்னோட நான் ஆட
ஆசைபட்டேன் நான் பாட...

மீனாச்சி கல்யாணத்தில்
மின்மினியா மிதந்து வந்த...
தேரு பாக்க போகயில
தேவதையா நீ நடந்த...
கூட்டத்தில வித்த பலூன்
காத்துல தான் பறந்துச்சு..
அதவிட மேல போயீ
என் மனசு மிதந்துச்சு....

மேலமாசி வீதி பொண்ணு
கண்ணடிச்சு காட்டுது
கீழமாசி வீதி பொண்ணு
பல்லகாட்டி சிரிக்குது
மேலமாசி கீழமாசி
எதுவும் எனக்கு வேணாண்டி..
ஆள மாத்தமாட்டே

மேலும்

காதலாரா அளித்த படைப்பில் (public) kppayya மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Feb-2014 2:05 am

கடிதம் என எனை வாங்கி
எண்ணம் எல்லாம் நீ எழுத - என்
உள்ளம் தந்தேன் உனக்காக - அதில்
உணர்வை கூட நான் தாங்க !!

நெஞ்சில் என்றும் நீ குத்தி
பூட்டி வைத்தாய் பத்திரமாய் !!
என்னவன் வந்து எடுத்து செல்ல
பறந்து செல்வோம் அவசரமாய் !!

பாதை எல்லாம் பரவசமாய்
அழைத்து கொடுப்பாய் அஞ்சலென !
பயணம் முடிந்தது பலவிதமாய் - என்
தோலை கிழித்தான் உன் அன்பன் !!

இதயம் படித்தான் என்னிடமே
அவ்வழகை மட்டும் ரசித்தேனே !
பதிலை பதிக்கவும் நான் தானே
பயணம் மீண்டும் தொடர்ந்தேனே !!..

குரலை கேட்க நீ நினைத்து
எங்கோ சென்றாய் எனை மறந்து !
கவனம் எல்லாம் சிதறுதடா
அன்பும் இங்கே குறையுதடா !!

மன

மேலும்

மிகவும் நன்றி நண்பரே கவி படித்து கருத்து தந்ததில் மன மகிழ்ச்சி ...தங்கள் கருத்து மேலும் என்னை மேம்படுத்த உதவும் அன்புடன் நான் 08-Mar-2014 2:05 am
மிகவும் நன்றி நண்பரே கவி படித்து கருத்து தந்ததில் மன மகிழ்ச்சி 08-Mar-2014 2:05 am
எடுத்து எழுது ஓர் கடிதம் !! நானும் உயிர்ப்பேன் அந்நிமிடம் - அருமை நண்பா 07-Mar-2014 2:35 pm
குரலை கேட்க நீ நினைத்து எங்கோ சென்றாய் எனை மறந்து ! கவனம் எல்லாம் சிதறுதடா அன்பும் இங்கே குறையுதடா !! என்ன செய்ய...? காலம் மாறி போச்சு சகோ ! 04-Mar-2014 12:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (31)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (31)

இவரை பின்தொடர்பவர்கள் (31)

a.n.naveen soft

a.n.naveen soft

kanjipuram
sarabass

sarabass

trichy
muralimanoj

muralimanoj

கோவை
மேலே