இளையராஜா

ராகங்கள் பதினாறு
அவர் இசையில் அது நூறு..
ஏழு ஸ்வரங்கள் இசையில்
மூன்று போதும் அவருக்கு..

இசையால்
மழை பெய்யுமோ?
இவர் நினைத்தால்
கண்ணீர் பெய்யும்..

தூக்கம் இல்லாத இரவில்
தாலாட்டும் அன்னை
இவர் இசை..

மண்டை வெடித்த
மன அழுத்தத்தில்
மருந்தாய் வரும்
இவர் இசை..

காதலியின் பிரிவில்
கலங்கி நிற்கையிலே
கண் முன் நிற்பாள்
இவர் இசையால்..

அவர் விரல்பட்ட ஸ்வரங்களில்
எத்தனை இனிமை !
தேன் கொண்டு எழுதினாரோ
ஸ்வரங்களை?
எவரிடம் பெற்றாரோ
இசை வரங்களை ?

தோல்வியில் ஆறுதலாய்
வெற்றியில் ஆனந்தமாய்
சோகத்தில் சுகமாய்
ஏக்கத்தில் துணையாய்
அவர் இசை போதும்
எனக்கு..
வேறென்ன வேண்டும்
என் வாழ்வுக்கு..

இன்பம் தந்தது இன்னிசை
மனம் மயக்கியது மெல்லிசை
ஆட வைத்தது துள்ளலிசை
எத்தனை வகையுண்டு இசையில்?
அத்தனைக்கும் மேலே உண்டு
இவர் இசையில்..

பாமரனும் பாடினான்
பணக்காரனும் நாடினான்
கடைக்கோடி தமிழன்
உயிரிலும் கலந்தோடும்
ராஜ கீதம்!
இளைய'ராஜ' கீதம்!

எழுதியவர் : மாடசாமி மனோஜ் (30-Apr-16, 12:46 pm)
பார்வை : 362

மேலே