சித்திரை திருவிழாவில் ஒரு காதல் கதை

கோவிந்தா கோவிந்தா
மயங்கிப்புட்டேன் நானுந்தான்
காந்தம் போல கண்ணவச்சு
இழுத்துபுட்ட நீயுந்தான்...

சித்திரை திருவிழாவில்
சித்திரமா நீ நடந்தா...
பத்திரமா வச்ச மனசு,
பறந்துபோச்சு காத்தோட....
பட்டுல பாவாட
காதோட ஜிமிக்கியாட
உன்னோட நான் ஆட
ஆசைபட்டேன் நான் பாட...

மீனாச்சி கல்யாணத்தில்
மின்மினியா மிதந்து வந்த...
தேரு பாக்க போகயில
தேவதையா நீ நடந்த...
கூட்டத்தில வித்த பலூன்
காத்துல தான் பறந்துச்சு..
அதவிட மேல போயீ
என் மனசு மிதந்துச்சு....

மேலமாசி வீதி பொண்ணு
கண்ணடிச்சு காட்டுது
கீழமாசி வீதி பொண்ணு
பல்லகாட்டி சிரிக்குது
மேலமாசி கீழமாசி
எதுவும் எனக்கு வேணாண்டி..
ஆள மாத்தமாட்டேன்
எனக்கு அம்சவல்லி நீதான்டி..

சுட்டெரிக்கும் சூரியன்..
அதிலும் உன்ன தேடுறேன்..
தேடி பாக்கும் வேளையில
தேவதை நீ பக்கத்துல...
கோடையில பெஞ்ச மழை
பக்கத்துல நீ தங்கசிலை..

சக்கரை தீபம் ஏந்தி
சனங்க சாமிய தேடுது..
சக்கரை பேச்ச கேக்க
என் மனசு ஏங்குது..
சட்டுன்னு திரும்பி என்னிடம்
சாமி எங்கனு நீ கேக்க..
சத்தமே வராம உன்ன
திரு திருனு நான் பாக்க...

கோவிந்தா கோவிந்தா
அதிர்ஷ்டகாரன் நானுந்தான்..
சித்திரை திருவிழாவில்
சிக்கிப்புட்டேன் நானுந்தான்...
பத்திரமா போய்ட்டுவாங்க
அடுத்தவருஷம் நானும் வாரேன்..
சத்தியமா சொல்லுறேன் என்
ஆளோட நான் சேர்ந்து வாரேன்....

எழுதியவர் : மாடசாமி மனோஜ் (18-May-14, 4:49 pm)
சேர்த்தது : madasamy11
பார்வை : 107

மேலே