மித வேகம் நெடு மோகம்

மோகம் கொண்டேன்
மூச்சினிலே..
வேகம் எடுத்தேன்
நெடுஞ்சாலையிலே..
வேகம் வேகம்
வேண்டுமோ இன்னும்?
வேண்டாம் வேகம்
காலன் தெரிகிறான்..
உயிர் விட்டால்
சொர்க்கமோ நரகமோ..?
என்னுயிர் நீ தொட்டால்
நிகழ் வாழ்வே
சொர்க்கமே..
வேகமென்ன வேகம்
நம் மோகமிங்கு போதும்
குறுஞ்சாலை ஆகும்
நெடுஞ்சாலை..
மித வேகம் நெடு மோகம்..