பூக்களில் எல்லாம் பறந்து செல்லும் பட்டாம் பூச்சி

பா :
பூக்களில் எல்லாம் பறந்து செல்லும்
பட்டாம் பூச்சி இவள் புன்னகை இதழருகில்
மயங்கி நின்றது தேனோ தேன்மலரோ என்று
அவள் மெல்லிய விரலால் பிடிக்க முயன்ற போது
இவள் தன் மலரல்ல என் மலரென்று
வண்ணச் சிறகு விரித்து விடை பெற்றது !
ப ஃ றொடை வெண்பா :
மலரெல்லாம் தாவிடும் ஒர்பட்டாம் பூச்சி
மலரோ மலர்த்தேனோ புன்னகை தேனிதழ்
என்று மயங்கியே நின்ற பொழுதில்
இவளதை தன்விரலால் மெல்லப் பிடிக்க
இவள்தன் மலரல்ல என்மலர் என்றது
வண்ணச் சிறகு விரித்து விடைசொல்லி
வானில் பறக்குது பார் !
----கவின் சாரலன்