இருந்தும் இல்லாத காதல்

விராட் கோலியின் காதல்
விளம்பரமானது.!
அனுஷ்காவோடு
அந்தரங்கமானது..!

நம்மூரில் தான்
இந்த மாதிரி காதல்
வாய்க்கும் காதுகளுக்கும்
அவலாகுமே...!

அட்ரஸ் இல்லாத ஆட்களையே
கண் வைத்து காது வைத்து
மூக்கு வைப்பார்கள்;

கோலியையா விடுவார்கள்,
போன வருடம் வேர்ல்டு கப் மேட்சில்
கோலியை விட்டு விட்டு
அனுஷ்காவை கொட்டி தீர்த்தவர்கள்

நேற்றைய ஆட்டத்துக்கும்
அளவில்லாத ஆனந்தத்தில்
ஆராய்ந்தார்கள்:
"அவள விட்டான்,
ஆளே மாறிட்டான்:
என்றார்கள்.

இன்று அதற்கு
கோலியின் பதில்:
"சில முட்டாள்களுக்கு
ஏனோ புரிவதில்லை.!
காதல் என்னை
உண்மையில்
பக்குவப்படுத்தியது"

இப்போது சொல்லுங்கள்:
காதல் தீதா?

எழுதியவர் : செல்வமணி (28-Mar-16, 10:47 pm)
பார்வை : 124

மேலே