நீ வருவாயா

என் விரல் இடுக்கில்
மழைத்துளி படாமல்
உன் விரல் மேல் பட
கை கோர்த்து நாம் நடக்க
நீ வருவாயா..?

முகத்தில் முத்தங்களாய்
மழை பொழிவதில்
பொறாமை கொண்டு
துப்பட்டாவில் முகம் மூட
நீ வருவாயா..?

கடும் மேகமூட்டத்தில்
முகம் மறைத்த
நிலவுக்கு மாற்றாய்
உன் முகம் நான் காண
நீ வருவாயா..?

சடசட மழைச்சத்தத்திலும்
நடுங்கும் உன் பற்களின்
சத்தம் என் பாடலுக்கு
பிண்ணனி இசையாக
நீ வருவாயா..?

மழையிலும் மறையாத
சில நட்சத்திரங்களை
வெட்கத்தில் ஓடவைக்க
காதல் செய்ய
நீ வருவாயா..?

குண்டு குழியில்
தேங்கிய நீரில்
புகைப்படமாய் நாம்
நிற்க, அதை ரசிக்க
நீ வருவாயா....?

மழை நின்ற போதும்
ரசனை தீர்ந்த போதும்
ரசித்திட கருப்பொருளாய்
நீ வருவாயா...?


~~மாடசாமி மனோஜ்~~

எழுதியவர் : மாடசாமி மனோஜ் (15-Apr-15, 1:17 am)
சேர்த்தது : madasamy11
Tanglish : nee varuvaayaa
பார்வை : 122

மேலே