சேராத காதல்
ஒரு
மழை இரவில்
என் கண்ணீர் துளிகள்
பச்சோந்தி ஆனதே..
அவள்
நினைவு வந்து
நிஜ உலகம் கரைந்து
பிம்பங்கள்
கண் சேருதே..
ஒற்றை குடையில்
ஒருவன் கைபிடித்த
ஒருத்தி முகம்
உன் முகமாய்
தோன்றுதடி..
மின்னல் அடித்து
இடித்த இடி
கண் விரித்து
ஏன் தாமதமென
நீ கேட்டது போலே
தோன்றுதடி..
சாரல்
மழைத்துளிகள்
எல்லாம், எச்சில்
தூறல் தூரி
நீ பேசுவதாய்
தோன்றுதடி...
காதல் பிரிவின்
காரணமாய் நாம்
வடித்த கண்ணீரெல்லாம்
மழையாகிப் பெய்யுதோ
பெருக்கெடுத்து ஓடுதே...
என் வாழ்வு
கரை சேரும் வரை
என் கண்ணீர் மழை
கடல் சேர்ந்து
கொண்டே இருக்குமோ..?