காதல் கறைகள்

காதலில் சிவந்த கறைகள்


வெள்ளை நிற ரோசா பூவ
தந்து வெச்சேனே-நான்
வெட்டு பட்ட இரத்தத்தால்
சிவக்க வெச்சேனே
அதனால்
வண்ணநிற பூமாலை என் மேல
வெள்ளநிற ரோசா சேல அவ மேல



அவ ஒரு கோபுரவிளக்கு
அது குப்பத்துல எரியாதா ?
அப்படியே ஆசைப்பட்டு
எரிஞ்சதனால்
குப்பமே இப்ப எரிகிறதே



மஞ்சள் நிற தாலிகட்டி
மண்குடிசையில் குடியேறிய
அக்கணமே
சிவப்புநிற தாலியாக அதைகலட்டி
கல்லறையில் ‘‘ஏன்
காதலித்தேனே?’’
என அழுதேனே மறுகணமே 😭😭😭

காதலிக்கு எங்கள் ராசாக்கள் 👑👑👑
கொடுத்த ரோசாக்கள்
காதலி சூடவில்லை
கல்லறையில் ராசாக்களே
சூடுகிறார்கள் 😢😢😢

எழுதியவர் : சே மகேந்திரன் (26-Mar-17, 5:38 pm)
சேர்த்தது : smahendhiran
பார்வை : 161

மேலே