smahendhiran - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  smahendhiran
இடம்
பிறந்த தேதி :  10-May-1997
பாலினம்
சேர்ந்த நாள்:  08-May-2016
பார்த்தவர்கள்:  182
புள்ளி:  27

என் படைப்புகள்
smahendhiran செய்திகள்
smahendhiran - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2018 8:06 am

பட்டினியால் வாடும் பாமரனுக்கு
வழிபிறக்க எழுதுவதா ?
காவிரிக்கு நீதி தேடும்
கண்ணீரை எழுதுவதா ?
அயராது போராட
ஆலையை மூட எழுதுவதா ?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான
பராசக்தியை எழுதுவதா ?
அத்தனையும் பாத்துக்கிட்டு ஆட்டம் போடும்
அரசியல் கூடத்தை எழுதுவதா ?
உதிரத்தை ஊற்றி எழுதுகிறேன்
எப்போது விடியல் பிறக்குமென்று

மேலும்

அருமை சமூக அவலத்தை பார்க்கும் போது ஒரு கவிஞனின் வரிகள் இப்படித்தான் உணர்ச்சி மயமான கேள்விகளாக வெளிப்பட வேண்டும் . பாராட்டுக்கள் கவி மகேந்திரன் . 19-Apr-2018 10:20 pm
இங்கே நீதியை தேடிப்போகும் பாதையில் இன்று உயிருள்ள மனிதர்கள் பலர் நாளை கல்லறையாகி விடுகிறார்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Apr-2018 7:55 pm
smahendhiran - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2017 9:24 pm

பாகுபலியான உச்சநீதிமன்றம்


சாட்சிகளை கேட்டு
தீர்ப்புகள் கடக்குது பல நேரம்
மனசாட்சிக்கு பொருந்த
தீர்ப்புகள் வருவது சில நேரம்

சட்டத்தின் ஓட்டைகளாலே
சரிந்துபோகுது பல தீர்ப்பு
சட்டத்தின் ஓட்டைகள் கூட
ஒழிந்து கொண்டது இந்த தீர்ப்பில்


மேல்முறையீட்டில் தகர்ந்துபோனது
சிலர் மரணம் எப்படியோ!
மேல்முறையீட்டாலும் தகர்க்க
முடியவில்லை இவர்கள் மரணம்


தலைக்கு ஆயுள்தண்டனையும் அபராதமும்
தரவேண்டாம் ஒருநாளும்
தலையை அறுத்து எடுத்தாலே
குற்றங்கள் குறைந்திடுமே பலநாளும்



நீதி கேட்டு நாடெங்கும்
பல நிர்பயா காத்திருக்கு கண்ணகியாய்
நீதி மட்டும் நீர்த்துப்போனால்

மேலும்

smahendhiran - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2017 11:00 pm

இதயங்கள் இடம்மாற

தவறிவிட்டால் (காதல்)

இரத்தத்தை வீணாக்கி

தவறிளைக்காதே (கையை அருப்பது,கத்தியால் குத்துவது )

இரத்தத்தை வேண்டி நிற்கும்

இதயங்களுக்கு இனி

தரமறுக்காதே (இரத்ததானம்)



மண்ணிலே இரத்தத்தை
வீணாக்கி மாண்டுபோகிறவர்கள்
அல்ல உயர் சாதி
மண்ணிலுள்ள மனிதருக்கு
இரத்தத்தை கொடையாக்கி
வாழ்பவரே உயர்சாதி




சாலையோர மரங்களெல்லாம்
இரத்த நீரால் வளர்கிறது
நம் வேகமான பயணத்தால்
சாலையிலே வேகமாக
பயணத்தை குறைத்திடுவோம்
சாவை நோக்கி பயணிக்கும்
உயிரை காத்திடவே
வேகமாக பயணிப்போம்

மேலும்

அருமை 18-Jun-2017 11:50 pm
smahendhiran - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2017 5:38 pm

காதலில் சிவந்த கறைகள்


வெள்ளை நிற ரோசா பூவ
தந்து வெச்சேனே-நான்
வெட்டு பட்ட இரத்தத்தால்
சிவக்க வெச்சேனே
அதனால்
வண்ணநிற பூமாலை என் மேல
வெள்ளநிற ரோசா சேல அவ மேல



அவ ஒரு கோபுரவிளக்கு
அது குப்பத்துல எரியாதா ?
அப்படியே ஆசைப்பட்டு
எரிஞ்சதனால்
குப்பமே இப்ப எரிகிறதே



மஞ்சள் நிற தாலிகட்டி
மண்குடிசையில் குடியேறிய
அக்கணமே
சிவப்புநிற தாலியாக அதைகலட்டி
கல்லறையில் ‘‘ஏன்
காதலித்தேனே?’’
என அழுதேனே மறுகணமே 😭😭😭

காதலிக்கு எங்கள் ராசாக்கள் 👑👑👑
கொடுத்த ரோசாக்கள்
காதலி சூடவில்லை
கல்லறையில் ராசாக்களே
சூடுகிறார்கள் 😢😢😢

மேலும்

smahendhiran - அனுசுயா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jul-2016 10:37 pm

என் அனுமானம்
சரியென்றால்,
அவளை நான் கண்டது
என் கனவாக
இருக்க வேண்டும் !

அவள்
புடவைக்குள் தன்னை
புகுத்திக்கொண்டு
நிற்கவில்லை

அவள் மார்டன்
உடைகளிலும்
ஒரு நேர்த்தி
இருந்தது

அவள் கூந்தலில்
ஒரு கன்னிப்
பூவும் இல்லை

காற்றோடு ஏதோ
ரகசியம் பேசிக்
கொண்டிருந்தது
அவள் கூந்தல்

அவளுக்கு ஆங்கிலம்
மட்டுமல்ல வேறுசில
மொழிகளும்
தெரிந்திருக்க வேண்டும்
அவள் முழுக்க
முழுக்கத் தமிழில்
பேசினாள்

அவள் கண்களின்
நரம்புகளில் கூட
நிறைந்த்திருந்தது
அவள் 'பெண்'
என்பதன் கர்வம் !


உங்களில் யாரேனும்
அவளுக்கு 'மாதவி'
என்று கூட
பெயர் சூட்டலாம்
போகட்டு

மேலும்

நன்றி அக்கா 03-Aug-2016 3:36 pm
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் எழுத்து பயணம்........ 30-Jul-2016 5:11 pm
நன்றி 17-Jul-2016 10:33 am
smahendhiran - கசூரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-May-2016 5:49 pm

Malai vandha pirgu vinnil thonrum vanavil pola un kan munne adikadi arthame illamal vandhu pogoren ippodhuma en vili pesum varthai puriyavillai

மேலும்

எனக்கு புரிகிறது உங்கள் கவிதையின் ஆழம். தமிழில் எழுத கற்றுக்கொள்ளவும் .தமிங்கலத்தில் வேண்டாம். 01-Jun-2016 7:16 pm
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-May-2016 6:56 pm
smahendhiran - மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2016 7:00 pm

நீரூற்றைப் போல
எப்பொழுதும்
கசிந்து கொண்டிருக்கிறது!
என் கண்களில் நீர்!
அப்பா
துடைப்பதற்கு உன் கைகள்
இல்லாதததால்....

மேலும்

தங்களின் விலைமதிப்பற்ற கருத்திற்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல! நண்பரே....... 02-Jun-2016 10:14 am
தங்களின் வெகுமதியான கருத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா! 02-Jun-2016 10:11 am
அருமை... அன்பின் வழியில் அனையா விளக்குககள். வாழ்த்துக்கள்.... 02-Jun-2016 8:17 am
எம் அருகில் இருக்கும் நேரம் எவற்றின் பெறுமதியும் எமக்கு புரிவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jun-2016 6:23 am
smahendhiran - இராசேந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2016 1:55 pm

பசும்பயிர் வாட பசுமையும் ஓட
மழையது மாயையாய்ப் போகுதே ஏனோ..?
எனக்குள் எழுகுது கானல் கவிதைகள்.
ஏனோ இதயத்தில் ஈர்ப்பும் குறைய,
இளைஞன் இவனது வாழ்க்கை இறங்குமுன்னே
ஏர்த்தொழில் விட்டே புதுத்தொழில் தேடி
இணைகின்ற நாளெந்த நாள்..?

மேலும்

விதியின் சதியில் இறைவன் எழுதிய தினமே! 25-May-2016 8:23 am
smahendhiran - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-May-2016 5:51 pm

எல்லா தொகுதிகளிலும் நோட்டா மற்ற வேட்பாளர்களை விட அதிக வாக்குகள்
பெற்றால் விளைவு ?
அல்லது
ஒரு தொகுதியில் நோட்டா அதிகம் வாக்குகள் பெறுகிறது
சொல்வோம் 5 லட்சம்
மற்ற வேட்பாளர்களுக்கு முறையே 4 லட்சம் 3 லட்சம் 2 லட்சம் 1 லட்சம்
கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம் .
நோட்டா ( NONE OF THE ABOVE ) ஒரு வேட்பாளரும் இல்லை. அதிருப்தி
அல்லது எதிர்ப்பினை தெரிவிக்கும் ஒரு வாக்காளர் அடையாளப் பதிவு .
இச் சூழ் நிலையில் 4 லட்சம் பெற்றவரை வெற்றியாளராக அறிவிக்க வேண்டுமா ?
பெரும்பான்மையினர் நிராகரித்த ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றவர் என்று
அறிவித்தால் சன நாயக மரபிற்கு முரண் அல்லவா ?
அப்படி

மேலும்

And so மை டியர் நந்து தாசன் வள்ளுவன் ---வள்ளுவனை அறிவேன் இந்த நந்து யார் ? உங்கள் ஆதரிச கவிஞரா எழுத்தாளரா மனிதரா ? உங்கள் புதுச்சேரிக் கவிஞர் கனக சுப்பு ரத்தினம் பாரதியை ஆதரிசமாகக் கொண்டு தன்னை பாரதி தாசன் என்று ஆக்கிக் கொண்டார் . தற்போதைய தமிழ்ப் படங்களின் பரிச்சயம் எனக்கில்லை . ஒரு புரட்சி உருவாக சமூகச் சூழல் அல்லது அரசியல் போக்கு எதுவாக இருக்கக் கூடும் ? மிக்கநன்றி புரட்சிச் சிந்தனைப் பிரிய நந்து தாசன் வள்ளுவன் அன்புடன்,கவின் சாரலன் 18-May-2016 10:30 pm
இளைஞர்கள் எழுச்சி பெற்று புரட்சி நிச்சயம் வெடிக்கும். உண்மை வாழ்க்கை தான் இப்பொழுதெல்லாம் சினிமா வடிவில் வருகிறது. ஆதலால் சினிமா புரட்சி நிச்சயம் உண்மை புரட்சியாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை . இனி என்னை நந்து தாசன் வள்ளவன் என அழைக்கவும் 18-May-2016 1:47 am
வித்தியாசமான பார்வை. பாராட்டுக்கள். புரட்சியெல்லாம் இங்கே சினிமாவில்தான் சாத்தியம். மிக்க நன்றி நாகலிங்கம் அன்புடன், கவின் சாரலன் 17-May-2016 7:00 pm
ஒருவகையில் சரி. மிக்க நன்றி மகேந்திரன் அன்புடன், கவின் சாரலன் 17-May-2016 6:54 pm
smahendhiran - smahendhiran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2016 9:27 pm

ஆள்காட்டி விரலில் அடக்கம்
அடுத்த இந்தாண்டு ஆட்சியின்
தொடக்கம்
அதனை பயன்படுத்தாமல் இருந்தால்
அது ஜனநாயகத்திற்கே முடக்கம்

அடிப்படை உரிமையில்
அலட்சியம் ஏனோ?
எளிதாய் கிடைத்து விட்டதனாலோ?

நாட்டை ஆள விருப்புவரெல்லாம்
நல்லவரா என தேடு
நல்லவரென்று நீயறிந்தால்
வாக்குசாவடியை நாடு

மேலும்

உணர்ந்து செயற்பட்டால் வாழ்க்கையும் நல்லதாய் அமையும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-May-2016 10:54 am
smahendhiran - smahendhiran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-May-2016 5:34 pm

உலகை உருண்டையாய்
ஆண்டவர் செய்தார்

அதனை அழகாய்

உழைப்பவரே செய்தார்



ஐம்பொருளால் ஆனது

அகிலம் - அது

உழைப்பவர் கையால்

ஆனது நூறாயிரம்



மண்ணிலும் விண்ணிலும்

விளைந்தது எல்லாம்

இவர்கள் மழையென

பொழிந்த வியர்வையிலே


கல்லும் ஆனது கலைச்சிற்பம்

கனிமங்கள் ஆனது பலபொருளாய்

உழைப்பவர் கைகள் பட்டதனாலே



உண்ணும் உணவை

உழைத்தவர் யாரோ?

உடுத்தும் உடையை

நெய்தவர் யாரோ?

உழைப்பில் மறையிதே

உலகின் சாதியும் மதமும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (5)

அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவரை பின்தொடர்பவர்கள் (4)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே