இரத்த தானம்

இதயங்கள் இடம்மாற

தவறிவிட்டால் (காதல்)

இரத்தத்தை வீணாக்கி

தவறிளைக்காதே (கையை அருப்பது,கத்தியால் குத்துவது )

இரத்தத்தை வேண்டி நிற்கும்

இதயங்களுக்கு இனி

தரமறுக்காதே (இரத்ததானம்)



மண்ணிலே இரத்தத்தை
வீணாக்கி மாண்டுபோகிறவர்கள்
அல்ல உயர் சாதி
மண்ணிலுள்ள மனிதருக்கு
இரத்தத்தை கொடையாக்கி
வாழ்பவரே உயர்சாதி




சாலையோர மரங்களெல்லாம்
இரத்த நீரால் வளர்கிறது
நம் வேகமான பயணத்தால்
சாலையிலே வேகமாக
பயணத்தை குறைத்திடுவோம்
சாவை நோக்கி பயணிக்கும்
உயிரை காத்திடவே
வேகமாக பயணிப்போம்

எழுதியவர் : செ.மகேந்திரன் (18-Jun-17, 11:00 pm)
சேர்த்தது : smahendhiran
Tanglish : iratha thaanam
பார்வை : 296

மேலே