அப்பாவுக்கு
பிஞ்சு நெஞ்சு தேடும்
ப்பா னு முதல் வார்த்தை பேசும்
கேட்கத்தான் நீ இல்லையே
எங்கே செல்வேன் ...
கை பிடிச்சு முன் நீ நடக்க
கரம் நீட்டி அப்பானு
கூப்பிட நீ இல்லையே ...
பெத்த அம்மா
வெள்ளாடையில் நிக்க
வெம்பி போகுதே என் மனசும் ..
பள்ளிக்கூடம் போகையில
சைக்கிள்ள உங்கோட போற
சுகம் நானறியேனோ..
ஒத்தையடி பாதையில
ஒண்டிய நடக்கையில் உன் அருமை
தெரியுதே அப்பா ..
தைரியம் சொல்லிக்கொடுக்க
அண்ணன் இருந்தாலும்
உன்னோட அரவணைப்பு
சொல்லி தருமே ஓராயிரம் வலிமை ..
அடிச்சு அணைக்க அன்னை இருந்தாலும்
ஆறுதல் சொல்லி ஆசை பட்டதை
வாங்கி தர நீ இல்லையே அப்பா ...
நினைவு நாள் வரப்போ
அன்னையவ அழற
அண்ணன் அவன் விசும்புறான்
புலம்பி தீர்க்க நாதியில்லையே அப்பா
அப்பா இல்லாத பொண்ணு னு
செல்லமா வரர்க்கறேன்னு சொல்ராங்க
எனக்கு மட்டும் தான் தெரியும்
அப்பாவின் அன்பின் வெறுமை ..
உன்ன போல ஒருத்தர எதிர் பாக்கறேன்
அடிச்சாலும் அணைச்சுக்கணும்
அம்மா போல பாத்துக்கணும்
அண்ணன் போல கண்டிச்சுக்கணும்
கல்யாணம் பண்ணி அழகு பாக்க
கட்டி கொடுக்க நீ இல்லையே ...
வலிச்சாலும் நா அழுதாலும்
அப்பானு கூப்பிட தோணுது
ஒரு முறை வந்து விடு
எங்களோடு இருந்து விடு ...