உழைப்பே உயர்வு
உலகை உருண்டையாய்
ஆண்டவர் செய்தார்
அதனை அழகாய்
உழைப்பவரே செய்தார்
ஐம்பொருளால் ஆனது
அகிலம் - அது
உழைப்பவர் கையால்
ஆனது நூறாயிரம்
மண்ணிலும் விண்ணிலும்
விளைந்தது எல்லாம்
இவர்கள் மழையென
பொழிந்த வியர்வையிலே
கல்லும் ஆனது கலைச்சிற்பம்
கனிமங்கள் ஆனது பலபொருளாய்
உழைப்பவர் கைகள் பட்டதனாலே
உண்ணும் உணவை
உழைத்தவர் யாரோ?
உடுத்தும் உடையை
நெய்தவர் யாரோ?
உழைப்பில் மறையிதே
உலகின் சாதியும் மதமும்