தாய் தினம்

எனை வளர்த்து பார்த்தற்க்கு
உனக்கேதும் விருது உண்டா??
என் வெற்றியை ரசிப்பவளே
உனக்கு விருது ஈடுண்டா??

எங்கே நீ பிறந்தாயோ
அது பற்றி தெரியாது!
என்னை நீ வளத்தாயே
அது எனக்கு மறவாது!

பாகங்கள் உருவாக்கி
பாதிவழியே உணர்வூட்டி
பார் வந்து அழும்போது
பாசத்தை நீ கொட்டி

சிரித்தவளே!!அன்றுமட்டும்
ஏன் சிரித்தாய்??
சிரித்தவளே!! இன்றுவரை
ஏன் அழுகிறாய்??

உலகத்தின் உயிகளெல்லாம்
தாயன்றி பிறப்பதில்லை!
உலகத்தின் உணர்வுகளெல்லாம்
தாய்தந்தது !வேறில்லை!

காதலின் கவனிப்பும்
இடங்களுக்கு ஏற்ப மாறுபடும்!
காமத்தின் கவனிப்பும்
உணர்ச்சிக்கு ஏற்ப மாறுபடும்!

உலகத்தின் மூலைக்கு நீ
சென்று அடைந்தாலும்
அங்கு ஒரு தாய் இருந்தால்
நீ நன்றாய் வளர்வாய் என்பதென் சத்தியம்!

உன்னை அவள் வளர்த்தபின்பு
தாய்பிறப்பு பூரணமாகும்!
உன்னால் அவள் மகிழென்றால்
சேய்பிறப்பு பூரணமாகும்!

எழுதியவர் : (8-May-16, 5:42 pm)
Tanglish : thaay thinam
பார்வை : 53

மேலே