தினம் ஒரு பாட்டு இயற்கை - 6 = 98

காம்பிழந்துப் போன பூவே
கால் முளைத்து வந்தாலென்ன
காம்பிழக்கச் செய்த வண்டை
காத்திட அருள் தந்தாலென்ன

நாள் கடந்துப் போகையிலே
நாள் பாத்துப் பூத்தப் பூவே
நல்ல கெட்ட சங்கதிக்கு
நல்லுதவி செய்யும் பூவே

பலா பற்றை ஜாதியிலே
பல வண்ணமாய் பூக்கும் பூவே
பலர் போற்றும் வகையிலே
பாரெங்கும் விளையும் பூவே

திருமண மேடையிலே
தோரணமாய் தொங்கும் பூவே
தாலி கட்டும் நேரத்திலே
அட்சதைகள் தூவூம் பூவே

ஆண்டவன் சன்னதியில்
யாண்டும் நிலவும் பூவே
மாண்டவர் ஊர்வலத்தில்
மண்டகப்படி ஆகும் பூவே

காதலுக்கு ஏதுவாக
தூதுச் செல்லும் செல்லப் பூவே
கடவுளின் பூஜைக்காக
கருவறையில் குவியும் பூவே

முதலிரவு நிகழ்வின்போது
உணர்வுகளை தூண்டும் பூவே
உறவுகளின் வருகையின்போது
உணர்ச்சிகளை காட்டும் பூவே

தும்பியினத்து வண்டுகளுக்கு
இன்பம் வார்க்கும் இனிய பூவே
காயம் பட்ட இடங்களுக்கு
களிம்பாய் பயன்படும் பூவே

அகிலமெங்கிலும் உன் புகழ்
ஆண்டாண்டுக்கும் நிலைத்திருக்கும்
அழையாத விருந்தாளி உன்னை
அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும்.

எழுதியவர் : சாய்மாறன் (8-May-16, 8:19 pm)
பார்வை : 62

மேலே