எதை நான் எழுத

பட்டினியால் வாடும் பாமரனுக்கு
வழிபிறக்க எழுதுவதா ?
காவிரிக்கு நீதி தேடும்
கண்ணீரை எழுதுவதா ?
அயராது போராட
ஆலையை மூட எழுதுவதா ?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான
பராசக்தியை எழுதுவதா ?
அத்தனையும் பாத்துக்கிட்டு ஆட்டம் போடும்
அரசியல் கூடத்தை எழுதுவதா ?
உதிரத்தை ஊற்றி எழுதுகிறேன்
எப்போது விடியல் பிறக்குமென்று

எழுதியவர் : மகேந்திரன் செ (19-Apr-18, 8:06 am)
Tanglish : ethai naan elutha
பார்வை : 71

மேலே