வாக்களிப்போம்

ஆள்காட்டி விரலில் அடக்கம்
அடுத்த இந்தாண்டு ஆட்சியின்
தொடக்கம்
அதனை பயன்படுத்தாமல் இருந்தால்
அது ஜனநாயகத்திற்கே முடக்கம்

அடிப்படை உரிமையில்
அலட்சியம் ஏனோ?
எளிதாய் கிடைத்து விட்டதனாலோ?

நாட்டை ஆள விருப்புவரெல்லாம்
நல்லவரா என தேடு
நல்லவரென்று நீயறிந்தால்
வாக்குசாவடியை நாடு

எழுதியவர் : சே.மகேந்திரன் (11-May-16, 9:27 pm)
பார்வை : 273

மேலே