பாகுபலியான உச்சநீதிமன்றம்

பாகுபலியான உச்சநீதிமன்றம்


சாட்சிகளை கேட்டு
தீர்ப்புகள் கடக்குது பல நேரம்
மனசாட்சிக்கு பொருந்த
தீர்ப்புகள் வருவது சில நேரம்

சட்டத்தின் ஓட்டைகளாலே
சரிந்துபோகுது பல தீர்ப்பு
சட்டத்தின் ஓட்டைகள் கூட
ஒழிந்து கொண்டது இந்த தீர்ப்பில்


மேல்முறையீட்டில் தகர்ந்துபோனது
சிலர் மரணம் எப்படியோ!
மேல்முறையீட்டாலும் தகர்க்க
முடியவில்லை இவர்கள் மரணம்


தலைக்கு ஆயுள்தண்டனையும் அபராதமும்
தரவேண்டாம் ஒருநாளும்
தலையை அறுத்து எடுத்தாலே
குற்றங்கள் குறைந்திடுமே பலநாளும்



நீதி கேட்டு நாடெங்கும்
பல நிர்பயா காத்திருக்கு கண்ணகியாய்
நீதி மட்டும் நீர்த்துப்போனால்
நாடே எரிந்திடும் விரைவில் அக்கினியாய்



நாடு முழுவதும் 34 ஆயிரத்து 600 வழக்குகள்

எழுதியவர் : சே.மகேந்திரன் (20-Nov-17, 9:24 pm)
சேர்த்தது : smahendhiran
பார்வை : 117

மேலே