மனது
மூப்பில் உடல் தொய்ய
நோய்கள் வந்து தாக்க
உடலும் சோர்ந்திட
நாடி ஒடுங்கும் நேரத்திலும்
மனிதன் விட மறுக்கிறான்
பேராசைகள்,,-மண் , பொருள்
பெண் என்ற ஆசைகள்
அத்தருணம் ஓர்
உளநோய் மருத்துவர்
அந்த மனிதரை ஆழ்
'தூக்கத்தில்' இட்டு சென்று
'இன்னும் ஏன் உனக்கு
ஆசைகள் என்று' வினவ
அந்த முதியவன் அப்போதும்
'நான் என்ன ஞானியா. இவற்றை
முற்றும் துறக்க என்பானாம்;
இதுதான் சராசரி மனிதன்
உள்மனது - உண்மை பேசும்!
அது வெளி மனதல்லவே!