கொக்கு, பற பற
காக்கா?, பற! பற!,
குருவி?, பற! பற!,
கடிது என்று,
கயமை கண்டு,
ஒதுங்கும் மனம் -
பற! பற!.
கிளி?, பற! பற!,
புறா?, பற! பற!,
தாழ்மை சொல்லி,
மனிதம் கொல்லும்,
தீண்டா மை-
பற! பற!.
கோழி?, பற! பற!,
சேவல்?, பற! பற!,
வரிசை தாண்டல்,
வழக்க மாக்கும்,
ஒழுக்க மின்மை -
பற! பற!.
ஆந்தை?, பற! பற!,
வெளவால்?, பற! பற!,
ஏழை கசக்கி,
ஏற்றம் காணும்,
மேலைத் துவம் -
பற! பற!
மைனா?, பற! பற!,
மயில்?, பற! பற!,
அன்னை மறந்து,
பெண்மை மிதிக்கும்,
ஆண் வக்கிரம் -
பற! பற!
கழுகு?, பற! பற!,
பருந்து?, பற! பற!,
இனம் மறந்து,
பணம் துரத்தும்,
ஈன குணம் -
பற! பற!
மனிதா!, இரு! இரு!
மாற்றம், பெறு! பெறு!
இவை மறைந்து,
இனிய உதயம்,
விடியும் நாளை -
பொறு! பொறு!