வளர் பிறை -1
"ஜெனி மா எழுந்திரிமா,,,, டைம் ஆச்சு பாரு,,,, ஸ்கூல் போகணும் மா எழுந்திரி மா"- மகளை அன்போடு எழுப்பினாள் மேரி,
"என்ன மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே"-கொஞ்சினாள் ஜெனி
"நோ ஜெனி யுவர் டைம் இஸ் ஓவர்,, கெட் அப்,,,"- அன்போடும் அதட்டலோடும் எழுப்பினாள் அண்ணி துளசி
"என்ன அண்ணி இன்னைக்குமா,,, சரி அப்பா எங்க அண்ணா எங்க"
"எல்லாரும் இங்க தான் மா இருக்கோம் கண்ண திற"-என்றார் அண்ணன் ஆனந்த்
மெல்ல கண்திறந்தாள் ஜெனி,,,,,,, அவள் குடும்பம் அவள் கண்முன்,,,,
"குட் மார்னிங் மை டியர் family "- என்றாள்
இது தான் ஜெனிக்கு பழக்கம்,,, காலையில் தன் குடுபத்தினரின் முகங்களின் விழிப்பது,,, அது தான் அவளுக்கு சூரியோதையம்,,,,
"குட் மார்னிங் மை child ,,,,,கம் ஆன் கெட் ரெடி"- என்றார் அந்தோணி,,, ஜெனியின் தந்தை
ஜெனி ஒரு குட்டி மான் போல துள்ளி ஓடினாள்,,,
ஜெனி ஓர் அழகு தேவதை,,, அவளின் கருவண்டு விழிகளில் ஒரு காந்த ஈர்ப்பு,,, யாரையும் ஆட்டிவைக்கும் அழகு,,, கோவை பழத்தினும் சிறந்த இதழ்கள்,,, அதில் என்றும் மாறாத புன்னகை,,,
அதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல அவளின் பதின்ம வயது,,, அந்த வயதிற்கேத்த குறும்பு,,,,
ஜெனி வீட்டிற்கு செல்ல பிள்ளை,,, 10 வகுப்பு படிக்கிறாள்,,,, அவள் அந்த வீட்டின் தேவதை
ஜெனி எழுந்து பல் துலக்கியதும் அண்ணி துளசி கையில் காபி தயாராக இருந்தது,,, குடித்தாள்,,,, குளித்துவிட்டு வந்தவளுக்கு அண்ணன் ஆனந்த் சீருடைகளை இஸ்த்திரி பண்ணி வைத்திருந்தான்
வெள்ளை நிற சட்டை அதன் மீது சிகப்பு நிற ஓவர் கோர்ட்,,, அதே நிற கட்டம் போட்ட ஸ்கர்ட்,,, கழுத்தில் டை,,, காலில் சாக்ஸ்,,, அணிந்தது டைனிங் டபிள் வந்தாள் அங்கே அம்மா மேரி அவளுக்கு உணவு ஊட்டிவிட்டார்
அப்பாவிடம் ஷூ மாட்டிக்கொண்டாள்,,, கையில் புத்தபை எடுத்து கொண்டு வாசலில் தனக்காக காத்திருந்த அண்ணனிடம் வந்தாள் ஜெனி
"அண்ணா நான் ரெடி"
"இந்த அண்ணனும் ரெடி,,, போலாமா "
தன் பைக்கில் ஜெனியை ஏற சொன்னார் ஆனந்த்,,, ஜெனியும் ஏறினாள்
"அண்ணா இப்போ அந்த கடை பக்கம் பாருங்களேன் "
"ஏன் மா "
"பாருங்க அண்ணா"
பார்த்தார் அங்கே சில இளவட்டங்கள் தங்களை விஜய், அஜித், சூரியா என்று நினைத்து கொண்டு ஜெனியின் பார்வைக்காக காத்திருந்தனர்,,
"என்ன ஜெனி வர வர உன் ரசிகர் கூட்டம் அதிக மாயிட்டே போகுது "- சிரித்தார் ஆனந்த்
"ஆமா அண்ணா"- ஜெனியும் சிரித்தாள்
"சரி சரி படிப்பை பார்த்துக்கோ ஜெனி அது தான் முக்கியம்"- என்றார் ஆனந்த்
"நான் உன் தங்கை அண்ணா"
"தெரியும் டா என் தங்கை பத்தி"
பேசி கொண்டே அவர்களின் பயணம் தொடர்ந்தது ,,, அந்த மலை பிரதேசத்தில் மரங்களுடே 20 km ,,, இயற்கை அன்னையின் அழகை ரசித்தபடி இந்த அழகு பதுமை பள்ளிக்கு சென்றது
(வளரும்,,,,,,,,,,)