விருதுகள்-2013 இணையதள தமிழ் படைப்பு சாதனைச் செம்மல்-2013
இணைஇணையதள தமிழ் படைப்பு சாதனைச் செம்மல்-2013
சொத்தாயிரம் இருப்பின் உனது
பத்தாயிரம் படைப்புக்கு ஒரு
பத்தாயம் அளவிற்கு பொன்
முத்தாரங்கள் அள்ளிக் கொடுக்கலாம்......
அன்றியும் எழுதிய கைகளுக்கு
குன்றனைய குளிரும் முத்தங்கள்
விடிய விடிய பலரும் கொடுக்கலாம்…..
முடிய முடிய கைகுலுக்கி களிக்கலாம்…..;.
இருப்பினும் இன்று உனக்கு நாங்கள் மனமுவந்து
தருகிறோம் ஒரு விருது 2014ஆம் ஆண்டின் முதல் விருதென
அன்று "ஐய்யாயிரத்திற்கு " அளித்ததுப் போன்றே...
இன்றும் “பத்தாயிரத்திற்கும்”!!
நமது தளத்தில் மிக அதிக படைப்பை தொடர்ந்தளிக்கும்
மது மயக்கும் பா புனையும் தோழர் ஹரி ஹர நாராயணன்
பெறுகிறார் இவ்விருது
“ இணையதள தமிழ் படைப்பு சாதனைச் செம்மல்-2013 “
வாழ்க ஹரி...வளர்க...லட்சத்தை நோக்கிய லட்சியத்துடன்....!!!!