சமயோசிதபுத்தி
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு மலைத்தொடர்,பச்ச பசெரஎன்று புல்வெளி அங்கங்கே விலங்குகள் மேய்ந்து கொண்டிருந்தது.அதில் ஒரு மலை ஆடு,மலையாடு என்றால் சாதாரண ஆடு போல் இல்லை கொம்புகள் தடித்து முறுக்கியும்,தாடி நீண்டும் இருந்தது.அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது எல்லா விலங்கும் அவை அவை இருப்பிடம் செல்ல ஆரம்பித்தது,மலையாடு மட்டும் ருசியாக மேய்ந்துகொண்டிருந்தது,மழை அதிகமாக வந்ததால் வழி சரியாய் தென்படாமல் கீழே உள்ள ஒரு மறைவான இடத்திற்கு சென்றது.அந்த இடத்தில் விலங்குகளின் எலும்புகள் நிறைய கண்டு அஞ்சி ,தான் தவறான இடத்தில் இருக்கிறோம் என்று உணர்த்து வெளியே செல்ல முற்படும்போது அந்த இடத்திற்கு சொந்தக்காரர் வெளியில் நின்றார்.
அவர் தான் காட்டுக்கே ராஜா நம்ம சிங்கம்.
சிங்கத்திற்கு அச்சரியம் யார் இது நம் குகையில்என்று.சிங்கத்திற்கு அது மலையாடு என்று அடையாளாம் தெரியாமல் கேட்டது யார் நீ,என் இடத்தில்.சிங்கத்தை பார்த்து அஞ்சி,நடுங்கி,(வடிவேல் கால் மட்டும் ஆடுமே) நடுக்கத்தை வெளி காட்டாத ஆடு சட்டென்று நான்தான் தாடி வீரன் என்றது.ஏன் இங்கு வந்தாய் என்று சிங்கம் கேட்க,நான் ஒரு நோன்பு இருக்கிறேன்.அது சாக வரம் பெற 1000 யானை,100 புலி,1 சிங்கம் கொன்றால் அழிவில்லா வாழ்வு கிட்டும், 1000 யானை,100புலி கொன்றுவிட்டேன்.ஒரேஒரு சிங்கத்தை தேடிக்கொண்டே இருந்தேன்.இதோ இன்று ஏன் நோன்பு முடிய போகிறது என்று ஒரு அடி எடுத்து வைத்தது ஆடு, சிங்கம் பயந்து ஓட ஆரம்பித்தது.வெகு தூரம் ஓடிய சிங்கத்தை வழி மறைத்தது ஒரு நரி,ராஜா எங்கே இந்த மழையில் இவ்வளவு வேகமாக ஓடுகிறிர் என்றது.சிங்கம் நடந்ததை சொல்ல நரிக்கு புரிந்துவிட்டது அது ஒரு ஆடு என்று. நரி எவ்வளவு சொல்லியும், சிங்கம் திரும்ப தான் குகைக்கு வர மறுத்தது.நரிக்கு ஒரு நப்ப ஆசை சிங்கத்துடன் சென்றால் எதாவது கொஞ்சம் கிடைக்கும் என்று. சிங்கத்தை சமாதானம் படுத்த கடைசியாக நரி சொன்னது ராஜா உங்களுக்கு பயமாக இருந்தால் தங்கள் வாலை என் வாலுடன் இறுக்க கட்டி கொள்ளுவோம் என்று ,இரண்டும் நடந்தது குகையை நோக்கி.
மலையாடு குகையை விட்டு வெளியேறாமல் இன்னும் அங்கேயே இருக்க, கண்டது இருவரையும். நரி சொன்னது, ராஜா நான் சொன்னேன் அல்லவா இது மலையாடு என்று.மலையாடுக்கு மேலும் பயம் முன்பு சிங்கம் மட்டும்,இப்போது நரி வேற,செத்தோம் என்று நினைக்க,இருவரும் ஆடு அருகே செல்ல.
மலையாடு,நரியை பார்த்து சொன்னது சபாஷ் நண்பா உன்னை கூட்டி வரசொன்னா,நீ கட்டியே இழுத்து வந்து விட்டாய் சபாஷ் என்று ஒரு அடி முன் வைக்க மிண்டும் சிங்கம் ஓட ஆரம்பித்தது.சிங்கத்தின் ஓட்டத்திற்கு நரியால் ஓடமுடியாமல் கல்லிலும் முள்ளிலும் அடிப்பட்டு இறந்தது.