மகேஷ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மகேஷ் |
இடம் | : குவைத் |
பிறந்த தேதி | : 23-Jul-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 81 |
புள்ளி | : 10 |
ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் கவிஞரே!
கற்பகவிருட்சம் கள்ளிகாட்டு
கற்பனையில் தென்பட்டு
வரங்கள் அமர்களமாய் வெளிவர -இந்த
ஆரூரான் மன கண்ணில் பட்டது இன்று
கற்பகவிருச்சத்திடம் இன்றைய
தமிழகத்திற்கும்
தமிழர்க்கும்
நான் என்ன கேட்டேன் -இது
எங்கேயோ கேட்ட கவிதையல்ல.
தமிழகத்தால் இந்தியாவிற்கு பெருமை கேட்டேன்-அதற்காக
திருக்குறளை சட்டமாக இயற்ற கேட்டேன்.
குழந்தைகளுக்கு தமிழ்பெயர்கள் கேட்டேன்.
காதல், கலப்பு திருமணம் கேட்டேன்-அதனால்
கலவரங்கள் எரியும் போது மழை கேட்டேன்.
விவசாயி முதல் குடிமகனாக கேட்டேன்.
யாசிக்கும் காவேரி இனி வேண்டாம் என்று கேட்டேன்.
ஆணின் பெயரில் வற்றாத நதி கேட்டேன்.-அதன்
ஆதி தமிழகத்தில் தொடங்க கேட்டே
மூவாறு வயது தொட்டு
யாராரோ பெண் கேட்டார்கள்
பெண்ணை மட்டுமல்ல....
பொன்னும் பொருளும் கூட
ஊனமுள்ள பெண்ணென்று
உயர்ந்து கொண்டே போகிறது
வீடு வாசல் சொத்தென்றும்
காரும் கூட வேணுமாம் கைக்கூலியாய்
அழகில் ஓர் குறையில்லை
அறிவிலும் ஓர் குறையில்லை
அன்பில் கூட குறையில்லை
அப்புறம் என்ன குறையோ?
ஊனம் கேட்டுப் பெற்ற வரமா?
கடவுள் கொடுத்த சாபமா?
பெற்றோரின் பாவமா?-அது
அனுபவிப்போரின் பலனா?
இயற்கை தந்த பரிசை
இழிந்துரைக்கும் இனமே
இதயம் தொட்டுச் சொல்லுங்கள்
உங்கள் பிள்ளை இப்படி இருந்தால்.....!!??
ஊனமென்று படைத்தவனே
உணர்ச்சியைக் கொன்று படைத்திருந்தால்
உங்கள் முன் நிற்கத் தேவையில்
பூலோகத்தின்
சொர்க்கம் நான்....
பூகோளத்தின்
புதைகுழியும் நான்...
""""""
பனி போர்த்திய
விதவை நான்....
பிணி தீரா
பிரச்சனையும் நான்....
""""""
அழகென்றால் அல்லலும்
வளமென்றால் ஆக்கிரமிப்பும்
அனுபவித்து நான்
கற்றுக் கொண்டிருப்பவை!
"""""'
சுதந்திர நாட்டின்
அடிமையும் நானே!
சுதந்திரக் காற்றுக்காய்
மூச்சுத் திணறும்
சுவாசமும் எனதே!
""""""
சுயக் குரலெழுப்பி
அடங்குவதற்குள்
குரல்வளைகள்
நெறிக்கப் படும் நெறிகளும்
எனக்கு!
"""""
என் மடியில்
ஆப்பிள்கள்
பறிக்கப்படுவதைப் போல்
என் மக்கள் உயிரும்
பறிக்கப் படுவது
சாதாரன நிகழ்வே!
"""""
என் வீட்டில் இராணுவம்
எப்போதும் நுழையலாம்
யாரையு
ஒரு கிராமத்தில் ,ரெண்டு பேரு வந்து ஒருத்தன் குழி வெட்டுறான், கொஞ்சநேரம் கழிச்சு இன்னொருத்தன் அத மூடுறான்.இப்படியே செய்றத பார்த்த கிராமவாசி ஒருத்தர், தம்பி என்ன செய்றிங்க என்று கேட்க.
அவன் சொன்னான் ,ஐயா நாங்க கிரீன் கிளப் சங்கத்தில் இருந்து வரோம்.எங்க சங்கத்தில இன்னைக்கு இந்த கிராமத்தில் மரக்கன்று நடனும் சொன்னாக.மூணு பேர இந்த வேலைக்கு போட்டாங்க.நான் குழி வெட்டனும்,இன்னொருத்தன் செடிய வைக்கணும்,இவன் குழிய மூடுனும். இன்னைக்குனு பார்த்து செடி வைக்கிறவன் லீவு போட்டுட்டான்.ஆனா நாங்க எங்க கடமையா செய்யாம இருக்க முடியாது.
அதன் .....எங்க வேலைய பாக்கிறோம்.
ஒரு மலைத்தொடர்,பச்ச பசெரஎன்று புல்வெளி அங்கங்கே விலங்குகள் மேய்ந்து கொண்டிருந்தது.அதில் ஒரு மலை ஆடு,மலையாடு என்றால் சாதாரண ஆடு போல் இல்லை கொம்புகள் தடித்து முறுக்கியும்,தாடி நீண்டும் இருந்தது.அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது எல்லா விலங்கும் அவை அவை இருப்பிடம் செல்ல ஆரம்பித்தது,மலையாடு மட்டும் ருசியாக மேய்ந்துகொண்டிருந்தது,மழை அதிகமாக வந்ததால் வழி சரியாய் தென்படாமல் கீழே உள்ள ஒரு மறைவான இடத்திற்கு சென்றது.அந்த இடத்தில் விலங்குகளின் எலும்புகள் நிறைய கண்டு அஞ்சி ,தான் தவறான இடத்தில் இருக்கிறோம் என்று உணர்த்து வெளியே செல்ல முற்படும்போது அந்த இடத்திற்கு சொந்தக்காரர் வெளியில் நின்றார்.
அவர் தான் காட்
உங்களை படம் எடுக்க சொன்னால் என்ன பெயர் வைபேர்கள்...
விட்டுக்கு ஒரு மரக்கன்று
இலவசமாக கொடுத்தாலும்
வாங்க வராதவர்கள்
மரத்திலிருந்து WiFi
வருகிறதாம் என்றதும்
எனக்கு இரண்டு
வேண்டும் என்றனர்.