கற்பகவிருட்சம்
கற்பகவிருட்சம் கள்ளிகாட்டு
கற்பனையில் தென்பட்டு
வரங்கள் அமர்களமாய் வெளிவர -இந்த
ஆரூரான் மன கண்ணில் பட்டது இன்று
கற்பகவிருச்சத்திடம் இன்றைய
தமிழகத்திற்கும்
தமிழர்க்கும்
நான் என்ன கேட்டேன் -இது
எங்கேயோ கேட்ட கவிதையல்ல.
தமிழகத்தால் இந்தியாவிற்கு பெருமை கேட்டேன்-அதற்காக
திருக்குறளை சட்டமாக இயற்ற கேட்டேன்.
குழந்தைகளுக்கு தமிழ்பெயர்கள் கேட்டேன்.
காதல், கலப்பு திருமணம் கேட்டேன்-அதனால்
கலவரங்கள் எரியும் போது மழை கேட்டேன்.
விவசாயி முதல் குடிமகனாக கேட்டேன்.
யாசிக்கும் காவேரி இனி வேண்டாம் என்று கேட்டேன்.
ஆணின் பெயரில் வற்றாத நதி கேட்டேன்.-அதன்
ஆதி தமிழகத்தில் தொடங்க கேட்டேன்.
ஒரே கட்சி ஒரே கொடி கேட்டேன்.
கண்ணகி சிலைக்கு விடிவு கேட்டேன்.
வாரிசில்லா அரசியல் கேட்டேன்.
காமராசர் ஆட்சி கேட்டேன்.
டாஸ்மார்க் ஒழிய கேட்டேன்.
மனிதநேயம் வளர கேட்டேன்.
கைக்கூலி கையில் விரலை அகற்ற கேட்டேன்.
பாலியல் மிருகத்திற்கு தனி நரகம் கேட்டேன்- அதில்
நொடிக்குநொடி தடையில்லா சித்ரவதைகேட்டேன்.
எல்லையற்ற கடல் கேட்டேன் .
தமிழக மீனவருக்கு துடுப்புடன் துப்பாக்கி கேட்டேன்.
தனித்தே தனி ஈழம் விடுதலை கேட்டேன் -அதற்காக
உயிர் விடும் வரமும் கேட்டேன்.